பொத்துவில் பிரதேச கல்வி அபிவிருத்தி கருதி பொத்துவிலில் உப வலயக் கல்வி அலுவலகம்
(ஏ.எல்.ஜனூவர்)
பொத்துவில் பிரதேச கல்வி அபிவிருத்தி கருதி பொத்துவிலில் உப வலயக் கல்வி அலுவலகம் திறந்து வைக்கப்படவுள்ளது.
12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு பொத்துவில் உப வலயக் கல்வி அலுவலகத்தை தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸ்ஸநாயக்க ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டு திறந்து வைக்கவுள்ளனர்.
இத்திறப்பு விழாவில்;, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சுகாதார சுதேசய வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.
பொத்துல் உப வலயக் கல்வி அலுவலகம் திறக்கப்படுவது தொடர்பில் அமைச்சர் உதுமாலெப்பை குறிப்பிடுகையில், பொத்துவில்; இப்பிரதேச மக்களின் மிக நீண்ட காலத் தேவையொன்று உப வலயக் கல்வி அலுவலகம் திறந்து வைக்கப்படுவதன் மூலம் நிறைவு செய்யப்படுகிறது என்றார்.

Post a Comment