Header Ads



ஈரானின் பெண் உயரிய விருதை வென்றார்

கணிதத்தின் நோபல் விருது என்று வர்ணிக்கப்படும் பீல்ட்ஸ் பதக்கத்தை முதல் முறையாக பெண் ஒருவர் வென்றுள்ளார். அமெரிக்காவில் பணிபுரியும் ஈரான் நாட்டு கணிதவியலாள ரான மரியம் மிர்சக்கானி என்பவரே அதனை வென்றுள் ளார்.

தென் கொரியாவின் சோல் நகரில் இடம்பெற்ற சர்வதேச கணிதவியலாளர்களின் மாநாட்டில் வைத்து வழங்கப் பட்ட நான்கு பீல்ட்ஸ் பதக்கங்களில் ஒன்றையே கலி போர்னியாவின் ஸ்டான் போர்ட் பல்கலைக்கழக விரி வுரையாளரான மிர்சக்கானி வென்றார்.

1936 ஆம் ஆண் டில் இருந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப் படும் விருதை வென்ற 56 பேரில் முதல் பெண் இவராவார். "இது எனக்கு கிடைத்த பாரிய கௌரவமாகும்.

இது இளம் பெண் விஞ்ஞானிகள் மற்றும் கணிதவியலாளர்களை ஊக்குவிப்பதாக இருந்தால் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்" என்று மிர்சக் கானி குறிப்பிட்டார். மிர்சக் கானி கணிதத்துறையில் பல ஆய்வுகளையும் மேற்கொண்டவராவார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 1977 ஆம் ஆண்டு பிறந்த மிர்சக்கானி ஹார்வார்ட் பல்கலைக்கழ கத்தில் கலாநிதி பட்டம் பெற்றவராவார்.

No comments

Powered by Blogger.