ஹமாஸின் தாக்குதலை முறியடிக்க இஸ்ரேல் வகுத்துள்ள புதிய உபாயம்..!
இஸ்ரேல்-காசாவுக்கு இடையிலான 72 மணிநேர யுத்த நிறுத்தம் பலஸ்தின நேரப்படி நேற்று நள்ளிர வோடு முடிவடையும் சூழலில் கெய்ரோவில் இரு தரப்பு சமரச பேச்சுவார்த்தை குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் இன்றி நீடித்துவருவதோடு யுத்த நிறுத்தத்தை நீடிப்பதிலும் சந்தேகம் நிலவிவருகிறது.
தற்போதைய நிலையில் கெய்ரோவில் இருக்கும் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பிரதிநிதிகள் நிரந்தர யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு உடன்பட வேண்டிய அல் லது யுத்த நிறுத்தத்தை நீடிப்பதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய நிலைக்கு நேற்று முகம்கொடுத்திருந்தனர்.
ஆனால் யுத்த நிறுத்தத்தை காலக்கெடுவுக்கு அப்பால் நீடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எகிப்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப் பிட்டுள்ளார். "பேச்சுவார்த்தையின் தீர்க்கமான தருண மாக இது அமைந்திருக்கிறது. என்ன முடிவு எட்டப்படும் என்று எதிர்வுகூறுவது கடினமானதாகும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீர்வொன்றை எட்டுவதற்கு நீண்ட தூரம் சேல்ல வேண்டி இருப்பதாக இஸ்ரேல் அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு விபரித்துள்ளார். மறு புறத்தில் சமரசப் பேச்சுவார்த்தை கடினமானது மற்றும் சிக்கல் கொண்டது என்று பலஸ்தீன அதிகாரி ஒருவர் விபரித்திருந்தார். எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருக்கும் பொது உளவுப்பிரிவு தலைமையகக் கட்டிடத்தில் ஒன்று கூடியிருக்கும் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பிரதி நிதிகள் வௌ;வேறு அறைகளில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் சமரச பேச்சில் ஈடுபடுகின ;றனர். இதில் எகிப்து மத்தியஸ்தர்கள் இருதரப்பு கோரிக்கைகளை பரஸ்பரம் முன்வைத்து தீர்வொன்றை எட்ட முயற்சித்து வருகின்றனர்.
காசா மீது இஸ்ரேல் கடந்த எட்டு அண்டுகளாக மேற்கொண்டுவரும் முற்றுகையை அகற்ற ஹமாஸ் உறுதியாக கோரி வருகிறது. ஆனால் காசாவில் உள்ள பலஸ்தீன போராளிகள் ஆயுதத்தை கலைந தாலே முற்றுகை அகற்றப்படும் என்று இஸ்ரேல் பதில் நிபந்தனை விதிக்கிறது. மூன்று நாள் யுத்த நிறுத்த காலக்கெடுவின் இறுதி நாளான நேற்றைய தினத்திலும் காசாவில் சுமுக நிலை நீடித்தது. எனினும் யுத்த நிறுத்தம் நீடிக்காத பட்சத்தில் தாக்குதலைத் தொடர இருதரப்பும் தயா ராக உள்ளன.
வடக்கு காசாவின் பைத் லஹியா பகுதியில் விழுந்து வெடிக்காமல் இருந்த ஏவுகணை ஒன்று நேற்று வெடித்ததில் குறைந்தது ஐவர் கொல்லப்பட்ட தோடு மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் ஏ.பி. செய்திச் சேவையின் வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவரும் இருப்பதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள் ளார். குறித்த ஏவுகணையை பொலிஸ் பொறியிய லாளர் குழுவொன்று செயலிழக்கச்செய்ய முயன்ற போதே அது வெடித்துச் சிதறியுள்ளது.
கடந்த ஜ{லை 8 ஆம் திகதி ஆரம்பமான காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் 1,962 பலஸ்தீனர் கள் கொல்லப்பட்டனர். இதில் அதிகப் பொரும்பா லானவர்கள் அப்பாவி பொதுமக்களாவர். மறுபுறத்தில் இஸ்ரேல் தரப்பில் 64 இராணுவத்தினரும் மூன்று சிவிலியன்களும் கொல்லப்பட்டனர்.இதன்போது காசா மீது தரைவழி தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல் அங்குள்ள ஹமாஸ் அமைப்பின் இஸ்ரேல் வரை செல்லும் இரகசிய சுரங்கப்பாதைகளை முற்றாக அழித்துவிட்டதாக அறிவித்தது. இவ்வாறு காசாவில் இருந்து கட்டப்படும் சுரங்கப் பாதையை கண்டறியும் சென்சர் வலையமைப்பை நிறுவ இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
இந்த தொழில் நுட்பத்தை அமைக்க பல மாதங்கள் செல்லும் என இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இதில் புதிதாக சுரங்கப்பாதை அமைப்பது கண்டறியப்பட்டால் பலஸ்தீன நிலத்திற்குள் படையெடுத்து அதனை அழிக்க நவடிக்கை எடுக்கப்படும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

Post a Comment