காஸா விவகாரத்தில் மஹிந்த ராஜபக்ஸவின் மௌனமும், சுதந்திர கட்சியின் அறிக்கையும்..!
காஸா விவகாரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தொடர்ந்து மௌனம் காத்துநிற்கும் வேளையில், இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற தவ்ஹீத் ஜமாத்தின் ஆர்ப்பாட்டத்திலும் இந்த கேள்வி பதாதைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
சுதந்திரமான பலஸ்தீன நாடு மற்றும் அதன் மக்களை பாதுகாக்க உலகில் உள்ள சகலரும் ஒன்றிணைய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
அறிக்கை
இஸ்ரேல், பலஸ்தீனம் மீது தொடர்ந்தும் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதனை கூறியுள்ளது.
இந்த துன்பகரமான சம்பவங்கள் இலங்கை உட்பட அமைதியை மதிக்கும் முழு உலகத்தையும் ஆழமாக உணர்ச்சிவசப்படுத்தும் விடயமாகும்.
இலங்கை, சுதந்திர பலஸ்தீன நாட்டை அங்கீகரித்து வருகிறது. அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பலஸ்தீன மக்களின் தேசிய போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய அவர்களின் நம்பிக்கையான நண்பன் எனவும் சுதந்திரக் கட்சியின் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொழுதுபோக்குக்காக பாலஸ்தீன போராட்டத்தை ஆதரித்தவர் இப்போது தன்னைக் காத்துக்கொள்ள பிசியாகிவிட்டதால் பொழுதுபோக்க நேரமில்லை.
ReplyDelete