Header Ads



அரச ஹஜ் குழுவின் பட்டியலை ஏற்றுக்கொண்ட சவூதி அரேபியா

(சுஐப் எம்.காசிம்)

அரசாங்க ஹஜ்குழு சவூதி அரேபியாவுக்கு அனுப்பிவைத்த ஹஜ் கோட்டா பட்டியலையே அந்த நாட்டு ஹஜ் விவகாரஅமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சுக்கு உத்தியோகபூர்வ அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஹஜ் கோட்டா பகிர்வில் தொடர்ந்து நீடித்து வரும் சர்ச்சைக்கு இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

கோட்டாப் பகிர்வில் தமது சங்க முகவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து செரண்டிப் ஹஜ் உம்றா சங்கம் உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படியே புத்தசாசன சமய விவகார அமைச்சின் செயலாளர் புதிய கோட்டாப் பகிர்வை சவூதிக்கு அனுப்பி வைத்தார். எனினும் அரசாங்க ஹஜ்குழு முதலில் தயாரித்தனுப்பிய ஹஜ் கோட்டா பட்டியலுக்கிணங்க சவூதி ஹஜ் விவகார அமைச்சு உரிய நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துள்ள நிலையில், பின்பு அனுப்பப்பட்ட பட்டியலை ஏற்க முடியா துள்ளதாக சவூதி ஹஜ் விவகார அமைச்சு தமக்கு அறிவித்துள்ளதாக ஜித்தாவிலுள்ள இலங்கை கவுன்ஸிலர் ஜெனரல் டாக்டர் உதுமா லெப்பை வெளிவிவகார செய லாளருக்கு அறிவித்துள்ளார்.

ஹஜ் முறைக்கான ஒன்லைன் முறையை இயக்க வைக்கும் கடைசித் திகதி 16.08.2014 ஆகும். வங்கி உத்தரவாதம் வழங்கப்பட்டதும் ஹஜ் ஒன்லைன் முறை செயற்பாடு இயங்குவதனால் ஏற்கனவே அமைச்சர் பெளசியினால் வழங்கப்பட்டு கம்பியூட்டரில் உள்வாங்கப்பட்ட கோட்டா பட்டியல் செயற்படத் தொடங்கியுள்ளதாகவும் டாக்டர் உதுமாலெப்பை எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் பெளசியினால் முன்னர் அனுப்பி வைக்கப்பட்டு தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்ட பட்டியலில் 89 முகவர்களுக்கு புள்ளிகள் அடிப்படையில் ஆகக் கூடியது 85 கோட்டாவும் குறைந்தது 5 கோட்டாவும் பிரிக்கப்பட்டன.

எனினும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் புத்தசாசன மத விவகார அமைச்சின் செயலாளர் 91 முகவர்களுக்கு 2240 கோட்டாக்களையும் ஆகக் கூடிய 51 ஆகவும் குறைந்தது 10 ஆகவு பகிர்ந்தளித்து அந்தப் பட்டியலை சவூதி தூதரகத்துக்கு அனுப்பியிருந்தார். பத்திரிகைகளிலும் விபரங்கள் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தன.

இணைத் தலைவர்களில் ஒருவரான பெளசி இது தொடர்பில் கருத்து தெரிவித்தபோது, ஹஜ் கமிட்டியில் தீர்மானித்து எடுத்த முடிவிற்கிணங்க பகிரப்பட்ட கோட்டாப் பட்டியல் ஏற்கனவே சவூதி அரேபிய அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டது. ஹஜ் பயனாளிகளின் நன்மை கருதியே நடவடிக்கை எடுத்தேன். முகவர்கள் செய்த அநியாயங்கள், அட்டூழியங்கள் பற்றி மக்கள் அறிவர். அவர்கள் சொன்னதுபோல் செய்யவில்லை.

கோட்டாக்களை விற்பனை செய்கின்றார்கள். நான் யாருக்கும் பக்கச்சார்பாக நடக்கவில்லை என்றார். மற்றொரு இணைத்தலைவரான பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ.காதரிடம் கேட்டபோது,

எனக்கு தெரியாமலேயே முதல் கோட்டா பிரிக்கப்பட்டது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தொடுத்தார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பும் கிடைத்தது என்றார். இதேவேளை இம்முறை முதலாவது ஹஜ் விமானம் எதிர்வரும் செப்டம்பர் 6ஆம் திகதி புறப்படுகின்றது. இறுதி விமானம் செப்டம்பர் 29ஆம் திகதி பயணமாகும்.

சவூதியின் இந்த அறிவிப்பின் எதிரொலியாக நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக செரண்டிப் ஹஜ் உம்றா சங்கம் தெரிவித்தது.

1 comment:

  1. ஹஜ்ஜையும் தொழிலாக்கி 2,3 லட்சத்துல போக வேண்டிய ஹஜ்ஜ இப்போ 7 லட்சம் கேக்கானுவோல் இவனுவோல இறைவன் ரோட்டுல பிச்சை எடுக்க விடனும் அப்படின்னாதான் மக்களற கஷ்ட நஷ்டம் புரியும்

    ReplyDelete

Powered by Blogger.