மகிந்த ராஜபக்ச + அவரது குடும்ப பெயர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை உபயோகித்து மோசடி நடவடிக்கைகளில் ஈடுப்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவற்துறை அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியாக இவ்வாறான மோசடி நடவடிக்கையில் ஈடுப்படுபவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளதாக ஜனாதிபதி தரவு மற்றும் தகவல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை மா அதிபரின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விஷேட விசாரணை பிரிவிற்கு, இது தொடர்பாக 368 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு, அச்சுறுத்தல் போன்ற விடயங்களுக்காக ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயர் பயன்படுத்தப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, கிடைக்க பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய இதுவரை 138 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 39 பேர் கைது செய்யப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தரவு மற்றும் தகவல் பிரிவு தெரிவித்துள்ளது.

RAHASIYAMA SAIRATHTHA C I D MÔÔlam pidikkapôraru ôk.publicla gnanasara janathipathiya kurai solli thiriwathu atha pdikka antha I D .
ReplyDeleteவேறயாரு சொல்றாங்க எல்லாமே ஒங்களோட குடும்பத்தினர்தான் சொல்றாங்க. அவங்கள் பிடிச்சி எங்க அடக்கிறதாம்.
ReplyDelete