ஜனாதிபதி அமைச்சர்களை திருத்தத் தவறினால், நாம் அதனை மேற்கொள்ள நேரிடும் - ஞானசாரர்
ஜனாதிபதி, அரசாங்க அமைச்சர்களை திருத்த வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே தெரிவித்துள்ளார்.
கிருலப்பனையில் 11-08-2014 நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களை ஜனாதிபதி திருத்தத் தவறினால் நாம் அதனை மேற்கொள்ள நேரிடும். பொதுபல சேனா அமைப்பு அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சித் திட்டம் மேற்கொண்டிருந்தால் அது குறித்து தெளிவான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
குற்றம் இழைக்கும் அமைச்சர்களுக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்கள் குற்றம் செய்தால் அதன் பொறுப்பினை ஜனாதிபதியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தை கவிழ்க்க பொதுபல சேனா முயற்சிப்பதாக அமைச்சர் ராஜித குற்றம் சுமத்தியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் ராஜித ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்.
குற்றச் செயல்களில் ஈடுபடும் அமைச்சர்கள் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். அரசாங்கத்தினால் எமது அமைப்பு உருவாக்கப்படவில்லை. எனவே தவறுகளை சுட்டிக்காட்டாது நாம் மௌனம் காப்போம் என எவரும் எதிர்பார்க்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment