Header Ads



ஆட்சியாளரின் செயற்பாட்டால், கடவுளின் சாபம் இலங்கையை பாதித்துள்ளது - ரணில்

ஆட்சியாளரின் செயற்பாட்டால் கடவுளின் சாபமே இலங்கையை பாதித்துள்ளதாக எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிங்கிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டின் நீர் முகாமைத்துவம் தொடர்பில் உரிய வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்த ஆளும் அரசாங்கம் தவறியுள்ளது. குருநாகல், பொலன்னறுவ, ஹம்பாந்தோட்டை ஆகிய பல பிரதேசங்களுக்கு இன்று கடுமையான வரட்சி காணப்படுகின்றது.

இப்போது இங்கு சேற்று நீரையும் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. மழை பெய்ய வேண்டும் என்றால் அரசன் நன்மை செய்ய வேண்டும். நாட்டில் தற்போது எங்கு தர்ம காரியங்கள் இடம்பெறுகின்றன.

கண்டியில் தலதா பெரஹராவுக்கு முன்னதாக கார் பந்தையம் நடத்தினால் கடவுள் நாட்டின் மீது சாப இடுவதில் ஆச்சிரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அந்த சாபமே மக்களை பாதிக்கிறது என்று எதிர் கட்சி தலைவர் குறிப்பிட்டார்.

1 comment:

Powered by Blogger.