ஜப்பான வைத்தியர்கள் கைவிட்ட இலங்கை பெண் - கொழும்பில் 4 குழந்தைகளை பிரசவித்தார்
ஒரே சூலில் நான்கு குழந்தைகள் பிறந்த சம்பவம் ஒன்று 11-08-2014 நாரஹேன்பிற்ற தனியார் மருத்துவ மனையில் இடம்பெற்றுள்ளது.
நான்கு ஆண் குழந்தைகளை 30 வயதான வரக்காபொலவைச் சேர்ந்த பெண் ஒருவர் பெற்றுள்ளார்.
குழந்தைகளை பெற்ற தாய், கடந்த 2011ஆம் ஆண்டு திருமணமாகி, கணவருடன் ஜப்பான் சென்றுள்ளார். ஜப்பானில் கர்ப்பமான இவர், ஜப்பானிய மருத்துவர்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, நான்கு குழந்தைகளை பெறவிருப்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும் இரு குழந்தைகளை மட்டுமே உயிருடன் காப்பாற்ற முடியும் என ஜப்பானிய மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், தாயகம் திரும்பியுள்ள இவர், தற்போது நான்கு குழந்தைகளை பெற்றுள்ளார்.
தாயும் குழந்தைகள் நால்வரும் சுகமேயுள்ளதாக, காசல் மகப்பேறு மருத்துவமனையில், சிசு மருத்துவ நிபுணர் சமன்குமார sfm செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார்.
.jpg)
Post a Comment