காஸாவில் காயப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது துருக்கி
காசாவில் இஸ்ரேல் தாக்குதலால் காயமடைந்த ஆயிரக்கணக்கானவர்களை சிகிச்சைக்காக துருக்கிக்கு அழைத்துவர காசா வுக்கு விமானம் செல்ல வழிவிடுமாறு துருக்கி அரசு இஸ்ரேல் மற் றும் எகிப்திடம் கோரிக்கை விடுத் துள்ளது. இது குறித்து பேச்சு வார்த்தை இடம்பெற்று வருவதாக துருக்கி வெளியுறவு அமைச்சர் அஹமட் டவுடொக்லு குறிப்பிட் டுள்ளார்.
'காயமடைந்த ஆயிரக்கணக்கானவர்களை அழைத்துவருவது குறித்து (பலஸ்தீன்) ஜனாதிபதி அப்பாஸ{டன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்களுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது. அவர்களுக்காக நாம் பல மருத்துவமனைகளிலும் இட வசதி செய்து வைத்திருக்கிறோம்" என்று டவுடொக்லு ராய்ட்டருக்கு கூறியிருந்தார்.
'எகிப்து, இஸ்ரேலிடம் மனிதாபிமான உதவிக்காக நாம் வான் வழியைக் கோரியிருக்கிறோம். அவர்கள் அனுமதி அளித்தால் எமது விமான அம்பு லன்ஸ்கள் காயமடைந்தவர்களை அழைத்துவரும்" என்றும் அவர் குறிப் பிட்டார்.
காசா பகுதி இஸ்ரேலின் முற்றுகையில் உள்ளதால் அங்கு வான், தரை மற்றும் கடல் வழியால் வெளி உலகுக்கு உள் நுழைய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment