இஸ்ரேலினால் காஸாவில் கைது செய்யப்பட்ட 200 பேர் எங்கே..?
(Tn)
காசா மீதான தரைவழி தாக்குதலின்போது கைதுசெய்யப்பட்ட பலஸ்தீனர்கள் பற்றி இஸ்ரேல் எந்த தகவலையும் வெளியிடவில்லை என்று பலஸ்தீன கைதிகள் விவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
'காசா மீதான தற்போதைய தாக்குதலின்போது ஆக்கிரமிப்பு இராணுவம் பல டஜன் பலஸ்தீனர்களை கைதுசெய்து இரகசியமான இடத்திற்கு கொண்டுசென்றுள்ளது" என்று கைதிகள் விவகார அமைச்சர் 'வ்கி அல் அயாசா வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களின் விபரம், நிலைமை குறித்து தமக்கு எந்த விபரமும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் வைத்து இஸ்ரேல் துருப்புகள் சுமார் 200 பலஸ்தீனர்களை கைதுசெய்ததாக கைதிகள் விவகார அமைச்சு கடந்த ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டிருந்தது. அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டதாக பின்னர் அறிவித்தது.
இந்நிலையில் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட 159 பலஸ்தீனர்கள் கைதுசெய்யப்பட்டதாக இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 'pன் பெட் உளவு நிறுவனத்திடம் விசாரணைகளுக்காக கையளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டிருப்பவர்கள் சிலர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே தாம் கைதுசெய்தவர்கள் குறித்து தகவலை வெளியிட இஸ்ரேல் பயப்படுவதாக அயாசா குற்றம்சாட்டினார்.

Post a Comment