பிரித்தானிய வீசா அனுமதிக்கு விண்ணப்பிப்போருக்கு புதிய திட்டம்
பிரித்தானிய வீசா அனுமதிக்கு விண்ணப்பிப்போருக்கு புதிய திட்டம் ஒன்றை பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
கடவுச்சீட்டை திரும்ப வழங்கும் சேவை என்ற அடிப்படையில் இன்று இந்ததிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்;டம் எதிர்வரும் 11 ஆம் திகதியிலிருந்து கொழும்பில் உள்ள வீசா நிலையத்தில் ஆரம்பிக்கப்படும் என்று பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இதன்படி வீசா நுழைவு அனுமதி தயாரிப்புக்கான காலப்பகுதியின் பெரும்பாலான காலத்துக்கு விண்ணப்பத்தாரி ஒருவர் தமது கடவுச்சீட்டை தம்வசம் வைத்திருக்கமுடியும்.
இந்த திட்டத்தின்படி வர்த்தகம், சுற்றுலா, உட்பட அடிக்கடி பிரித்தானியாவுக்கு பயணிப்பவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று உயர்ஸ்தானிகரம் குறிப்பிட்டுள்ளது
எனினும், இந்த சேவை வியாபார கடுகதி திட்டத்திற்கோ அல்லது பிரித்தானியாவின் முதன்மை வீசா சேவைக்கு உட்பட்டவர்களுக்கு பொருந்தாது என உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் கடவுசீட்டு திரும்பவழங்கும் புதிய திட்டத்துக்காக விண்ணப்பதாரியிடம் இருந்து மேலதிகமாக சுமார் 9ஆயிரத்து 400 ரூபா அறிவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment