அஷ்ரப் வைத்தியசாலைக்கு கலங்கம் ஏற்படுத்தாதீர்கள் - வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம். நசீர்
(எம்.எம்.ஏ.ஸமட்)
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்;தாது அதன் வளர்சிக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வருமாறு ஊடகவியலாளர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார்.
இன்று(15.8.2014) மாலை வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வைத்தியசாலைக் குழுவிற்கு சுகாதார அமைச்சினால் புதிதாகத தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவத்திற்கு தலைமைவகித்து உரையாற்றும்போது அவர் மேற்கண்ட வேண்டுகோளை விடுத்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
வைத்திய அதிகாரிகள், வைத்திய நிபுணர்கள், வைத்திய உத்தியோகத்தர்கள் தாதியர் உத்தியோகத்தர்கள் ஏனைய ஊழியர்கள அடங்களாக ஏறக்குறைய 430 பணியாட்களைக் கொண்டு இயங்கும் இவ்வைத்தியசாலை குறிப்பிட்ட காலத்தினுள் பல்வேறு வழிகளிலும் பல வளர்ச்சிப் படிகளை எட்டியுள்ளது.
இதற்கு வைத்தியசாலையின் ஊழிர்கள், வைத்தியசாலைக் குழு, வைத்தியசாலை அபிவிருத்திக்குழ, புத்திஜீவிகள,; ஊர் பிரமுவர்கள், மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாக உள்ளது.
அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச மக்கள் மாத்திரமின்றி, பல பிரதேசங்களையும் சேர்ந்த மக்களுக்கு இவ்வைத்தியசாலை சுகாதார சேவையினை வழங்கி வருகிறது.
பல்வேறு வைத்தியசேவைப் பிரவுகள் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இயங்கி வருகிறது. அண்மையில் இதய நோய்க்கான விஷேட சிகிச்சைப் பிரிவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் எந்தவொரு வைத்தியசாலையிலும் இல்லாத சில வசதிகள் இந்த அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு இங்குள்ள நிர்வாகமும் திறைமைமிக்க வைத்தியர்களும் ஊழியர்களும் வைத்தியசாலைக் குழுவுமே காரணமாகவுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
இவ்வைத்தியசாலையின் செயற்பாட்டுத்திறனையும் பாதுகாப்பானதும் தரமானதுமான சேவைகளையும் கருத்திற்கொண்டு உலக வங்கியின் உதவியுடன் அவசர விபத்துச்சேவைப் பிரிவை நிறுவவும் நெதர்லாந்து அரசின் உதவியுடன் இரத்த வங்கியொன்றை நிறுவுவதற்கும் நாடாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ள குறிப்பிட்டுள்ள வைத்தியசாலைகளுள் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையும் ஒன்றாகும்.
இவ்வாறு இவ்வைத்தியசாலை ஒரு சில தடங்களுக்கு மத்தியில் வளர்ச்சி கண்டு வரும் வேளை, இவ்வைத்தியசாலையின் பெயருக்கு இழுக்கு ஏற்படும் வகையில், அதன் வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்தும் நோக்கில், அதன் தரத்தை குறைத்து மதிப்பிடச் செய்யும் வகையில் ஒரு சிலரினால் வேண்டத்தகாத வகையில் பொய்யான செய்திகள் சமூக வலைத்தளங்களினூடாக பரப்படுகிறது. இதனை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
வௌ;வேறு தராதங்களை உடைய பணியாளர்கள் பணி புரியும் ஒரு பொது அரச நிறுவனத்தில் ஒரு சில தவறுகள் ஏற்படுவது இயற்கையானது. அந்தவiயில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையும் ஒரு பொது நிறுவனமாகும.; இங்கும் தவறுகள் நடைபெறலாம். இவ்வைத்தியசாலையின் தவறுகளால் பாதிக்கப்படுபவர்கள் அந்தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் எதிர்காலத்திலும் அவ்வாறு ஏற்படாது செயற்பட முடியும்.
ஆனால, தவறுகளை உரியவர்களுக்குத் தெரியப்படுத்தாமல், அவற்றிலுள்ள சரி பிழைகளை உரியவர்களைக் கொண்டு அறிந்து கொள்ளாமல் இவ்வைத்தியாலையின் பெயருக் கலங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு ஊடகங்கள் வாயிலாக பொய்யான பிரச்சாரங்ளை மேற்கொள்வது ஊடகத் தர்மத்தை மீறும்செயலாகவுள்ளதோடு மக்களுக்கு இவ்வைத்தியசாலையினால் கிடைக்கவிருக்கும் நன்மைகளைத் தடுக்கும் செயலாகவும் அமைகிறது.
இவ்வைத்தியசாலைக்கு கிடைக்கவிருக்கின்ற நன்மைகளை கிடைக்காமல் செய்வதற்கு திரைமறைவில் வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்றுதான் இவ்வைத்தியாலையில் நிறுவப்படவுள்ள இரத்த வங்கியினை ஒரு சில காரணங்களைக் காட்டி பிரிதொரு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முயற்சிக்கப்படுவதாகும். இவ்வைத்தியசாலையில் அவசர விபத்துச் சேவைப் பிரிவு உருவாக்கப்படும் போது அதற்கான வசதிகள் கொண்ட இரத்த வங்கியும் அவசியத் தேவையாக அமையும்.
அந்தவகையில் இவ்வைத்தியசாலையில் இரத்த வங்கி உருவாக்கப்படுவதற்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள குழு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று நம்புகின்றேன்.
இவ்வைத்தியசாலை தரமடைகின்றபோது, வளர்ச்சி காணுகின்றபோது அதனால் பயனடைவது இவ்வதை;தியசாலையின் வைத்திய அத்தியட்கசரோ ஏனைய வைத்தியர்களோ அல்லது வைத்திசாலை ஊழியர்களோ அல்ல. மாறக இப்பிரதேசத்தைச் சார்ந்த மூவின மக்களுக்கும்தான். இவ்வைத்தியசாலையின் பயன்களை அனுபவிப்பவர்கள் மக்கள்தான்.
அதனால் வைத்தியசாலையின் வளர்ச்சியில் எவரும் எவ்வித வேறுபாடுகள,;; முரண்பாடுகள் இன்றி தங்களது பங்களிப்பைச்; செய்ய முடியும். அதற்கான வழிகள் என்றுமே திறந்துதான் இருக்கிறது
எனவேதான், இவ்வைத்தியசாலையின் வளர்ச்சிக்குக்கு பங்களிப்புச் செய்வது ஒவ்வொருவரினதும் தார்மீகக் கடமை என்று மனதளவில் ஏற்று பங்களிப்புச் செய்மாறு வேண்டுவதுடன் இவ்வைத்தியசாலயின் பெயருக்கு தேசிய மட்டத்தில் கலங்கத்தை ஏற்படுத்தி அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருக்காமல் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முன்னேற்றத்திலும் அதன் உயர்ச்சியிலும் கைகோர்க்குமாறு பிரதேச ஊடகவியலாளர்களிடமும் வைத்தியசாலைக்குழுவிடமும் மக்களிடமும் வேண்டுகோள்விடுப்பதாக வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம். நசீர் மேலும் தெரிவித்தார்.
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு சகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட புதிய வைத்தியசாலைக்குழுவிற்கு 39பேர் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இன்று இடம்பெற்ற நியமனம் வழங்கும் வைபத்தின்போது புதிய குழுவின் தலைவராக சட்டத்தரணி யு.எம்.நிசார், செயலாளாராக எம்.. பர்ஸான் பொருளாலராக அப்துல் சத்தார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் இவ்வதை;தியசாலையில் உருவாக்கத் திட்டமிடப்பட்டிருந்த இரத்த வங்கியினை மாற்று வைத்தியசாலை ஒன்று மாற்றுவதற்கு எடுக்கப்படும் முயற்சி தொடர்பில்; புதிதாக நியமிக்கப்பட்ட வைத்தியசாலைக குழுவினால் கண்டனத் தீர்மானவும் ஏகமனதாக எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

வைத்திய அத்தியட்சகர்
ReplyDeleteஏ.எல்.எம். நசீர் அவர்கட்கு,
இந்த அறிக்கை நீங்களாக விடவில்லை என்பதும், உங்கள் மேலதிகாரிகளினதும் அரசியல்வாதிகளினதும் அழுத்தமே “இந்த அறிக்கை” என்பதும் தெரியும்.
ஏனெனில் அறிக்கை அரசியல் பாணியிலுள்ளது! அவர்கள்தான் உண்மைத் திரித்துக் கூறும் தரித்திரிகள்.
300க்கும் அதிகமான பள்ளிகள் உடைக்கப்பட்டபோதும் அந்த உண்மைகளை அறிந்திருந்தபோதும், அப்படியொன்றும் நடக்கவில்லை என்று நாக்கூசாமல் சொன்னவர்கள்!
அந்த வழி, அந்தப் பாவம், அந்த முறை, அந்தப்பாணி, அந்த “முனாபிக்” குணம் போன்ற விஷமங்கள் உங்ளைப்போன்ற எவருக்குமே தொற்றக் கூடாது என்பதே எங்கள் பிரார்த்தனை!
.......................................
உண்மைதான், அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையை வளர விடக்கூடாதென்பதில் விடாப்பிடியாய் பல தீய கும்பல்கள்; சதி செய்வதையே வேலையாகக் கொண்டுள்ளது, என்பது உண்மைதான்.
இவர்களை முறியடித்து, முழுமையாக முடக்கிவிடவும், இந்தக் காழ்புணர்வுக் காரர்களை காணாமல் போகச் செய்யவும், பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தவும் நம்மாலான எல்லா முயற்சிகளையும் பொதுமக்களும், வைத்தியசாலை நிருவாகமும் செய்யவேண்டும்.
வைத்தியசாலை நிருவாகம் செய்யா விடினும் நாங்கள் அதில் கவனமாகவும், கரிசனையுடனும், கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஒருசிலரை அறிந்தும் வைத்திருக்கிறோம்! கையும் மெய்யுமாகப் பிடிபடும் வரைக்கும் அவர்களை விட்டும் வைத்திருக்கிறோம்! அது அப்படி இருக்க;
வைத்தியசாலையில்; பிரசவ விடுதியில்; பண்புதவறிய, அநாகரிக, நெறியற்ற, அசிங்கமான வார்த்தைகளால் கற்பிணித்தாய்மார்களை இழிவுபடித்துகிரார்கள் என்பது 100% உண்மையே. இந்த உண்மைக்கு நான் உட்பட எல்லோருமே சாட்சி. நீங்களும் கூடத்தான்!!!!!
(இழிகுலத்தில் பிறந்தோர்களால்தான் இழிவான வார்த்தைகளை இலகுவாகப் பேசமுடிகிறது).
“பல சந்தர்பங்களில் உண்மை கசப்பாகவே இருக்கும்” அதற்காக அதை ஒழித்துவிடவோ, மறைதுவிடவோ முடியாது!!! ஒலித்துவிடவேண்டியதை தயவு ஒழித்துவிடாதீர்கள்!!!
இந்தக் கர்ப்பிணித் தாய்மார்கள் அவஸ்தை இங்குமட்டுமல்ல – பல இடங்களிலும் நடக்கிறது! இதற்கு உடனடித்தீர்வு காணவேண்டும்! (என் நண்பர் ஒருவர் சொன்னார் இந்த இழிவார்தைக்காரத் தாதிமாருக்கு ஆள் வைத்து அடிக்கவேண்டுமென்று!) அந்த அளவுக்கு இவர்களின் அருவருப்பான வார்த்தைப்பிரயோகங்கள் மக்களின் மனங்களைக் கடுமையாகக் காயப்படுத்தி இருக்கின்றன.
அவஸ்தைகளால் அறிக்கைகள் விடும் நிலைக்கே இன்று அரச உயரதிகாரிகள் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்!
அகவே, அறிக்கை விடச்சொல்பவர்கள் சொல்வதுபோல் எந்த அறிக்கை வேண்டுமாலும் விடுங்கள்;
ஆனால் நமது வைத்திய சாலையில் நடக்கும் இந்த திறந்த ரகசியமான அநாகரிகங்களுக்கு, உடன் வைத்தியம் பார்த்து குணப்படுத்துங்கள் என்று.......
கல்முனை மக்கள் சார்பிலும் இந்த மண்ணை மனசார நேசிப்பவன் என்ற நோக்கிலும் நமது வைத்தியசாலை வளரவேண்டும், முதலிடத்தில் ஒளிரவேண்டும் அது கேட்டு நம்மக்கள் மனம் குளிரவேண்டும் எனும் விருப்பிலுமே, இம்மடலும் மனுவும் உங்களுக்கு!!!