Header Ads



இம்ரான்கான் மயிரிழையில் உயிர் தப்பினார்

பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தல் முறைகேடுகளை கண்டித்து பாகிஸ்தானின் சுதந்திர தினமான நேற்று பேரணி மற்றும் போராட்டம் நடத்த உள்ளதாக தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் அறிவித்திருந்தார். 

அதன்படி, நேற்று லாகூரில் துவங்கிய பேரணி மற்றும் போராட்டத்தால் லாகூர் நகரமே ஸ்தம்பித்தது. லட்சக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த பேரணி பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா நகரை இன்று அடைந்தது. 

அப்போது இம்ரான் கானின் வாகனத்தை நோக்கி நான்கு இடங்களில் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் வாகனத்தின் மேற்பகுதியில் நின்று தொண்டர்களை நோக்கி கையை அசைத்தபடி வந்த இம்ரான் கான், வாகனத்தின் உள்ளே அமர்ந்தபடி பேரணியில் பங்கேற்றார். 

அப்போது அவரது வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. சில தோட்டாக்கள் இம்ரான் கானின் வாகனத்தை துளைத்து சென்றன. இச்சம்பவத்தில் அவர் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் செய்தி தொடர்பாளர் அனிலா கான் தெரிவித்துள்ளார். 

தன்னை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப் தான் காரணம் என்று இம்ரான் கான் குற்றம் சாட்டுயுள்ளார். 

நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தொண்டர்கள் போலீஸ் வாகனங்களின் மீது ஏறி நின்று தங்களது பேரணியில் வந்த மக்களின் மீது கற்களை எறியும் காட்சிகள் ‘சி.சி.டி.வி.’க்களில் பதிவாகியுள்ளதாகவும், நவாஸ் ஷரிப்பின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் சுமார் 10 லட்சம் தொண்டர்களுடன் தலைநகர் இஸ்லாமாபாத்தை முற்றுகையிட்டு ஆட்சியை கவிழ்க்க போதுமான மக்கள்சக்தி தன்னிடம் உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் இம்ரான் கான் இன்று தெரிவித்துள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

1 comment:

  1. Pakistanil otrumai enpathu kuthiraik kompu.peralawilthan pakistan muslim nadu athu oru bidath pidiththa naadu payankarawathikalin anusaranayoduthan anku governmant nadaththa mudiyum.alla khanum oru kuttayil ooriya kaluthaikalthan.

    ReplyDelete

Powered by Blogger.