யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு வைத்தியர்
ஓட மறுத்த மோட்டார் சைக்கிளை வைத்தியர் ஒருவர் வீதியில் வைத்து தீயிட்டு கொளுத்திய சம்பவமொன்று யாழ்ப்பாணம் மல்லாகத்தில் இடம்பெற்றுள்ளது.
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் நேற்று முன்தினம் பகல் வேளை மோட்டார் சைக்கிளில் மல்லாகம் சந்திக்கு அண்மையில் சென்று கொண்டிருந்த போது அவருடைய மோட்டார் சைக்கிள் திடீரென நின்றுவிட்டது.
குறித்த வைத்தியர் ஓட மறுத்த தனது மோட்டார் சைக்கிளை சிறிது தூரம் உருட்டிச் சென்றுள்ளார். மல்லாகம் சந்திக்கு அண்மையில் உள்ள மில் ஒழுங்கையில் குப்பையில் நெருப்பு எரிந்துகொண்டிருந்துள்ளது. இதனைக் கண்ணுற்ற வைத்தியர் குப்பைக்கு அருகில் சென்று தனது மோட்டார் சைக்கிளுக்குத் தீ மூட்டியுள்ளார்.
இதனை அவதானித்த பொது மக்கள் மோட்டார் சைக்கிளை காப்பாற்ற முயன்ற போதிலும் முடியாத நிலையில் மோட்டார் சைக்கிள் முழுமையாக எரிந்துள்ளது.
வைத்தியரின் நடவடிக்கை தொடர்பாக மக்கள் கேட்ட போது குறிப்பிட்ட மோட்டார் சைக்கிளை பயன்படுத்த வேண்டாம் என வீட்டில் உள்ளவர்கள் ஏசுவதாகவும் மோட்டார் சைக்கிளும் ஓடவில்லையென்பதால் அதனைத் தீயிட்டுக் கொளுத்தியதாக பதிலளித்துள்ளார்.
.jpg)
Post a Comment