Header Ads



மாயமான மலேசிய விமானம் பற்றிய புதிய தகவல்..!

கடந்த மார்ச் 8ல் எம்.எச்.370 என்ற போயிங் விமானம் அதன் 239 பயணிகளுடன் மாயமானது. மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370-ல் பயணம் செய்த பயணிகள் பிராண வாயு இல்லாமல் மூச்சுத் திணறி பலியாகியிருக்கலாம் என்று புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்புக்குள்ளாகியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் அந்த விமானத்தின் பைலட் அகமது ஷா வேண்டுமென்றே பிராண வாயு தொடர்பைத் துண்டித்திருக்கலாம் என்ற பீதி எழுந்துள்ளது. இந்த புதிய தகவலை நியூசிலாந்தில் உள்ள விமான விபத்துக்கள் பற்றிய ஆய்வு நிபுணர் தெரிவித்துள்ளார். டெய்லி மிரர் பத்திரிகையில் இது பற்றிய கட்டுரை வெளிவந்திருக்கிறது. ஆனால் அது பற்றி இன்னமும் தெளிவாக ஒன்றும் கூற முடியவில்லை.

மாயமான மலேசிய விமானம் புதிய தகவல்:

நியூசிலாந்தின் கிவி ஏர்லைன்ஸ் நிறுவனரும், பைலட்டுமான இவான் வில்சன், தற்போது புதிய தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். விமானத்தின் பைலட் வேண்டுமென்றே பிராண வாயு தொடர்பைத் துண்டித்திருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

மாஸ்டர் பிளான்:

பைலட்டின் மாஸ்டர் பிளான் தனது சக பைலட்டை கேபினிலிருந்து வெளியேற்றிவிட்டு அகமது ஷா தனது ஆக்சிஜன் மாஸ்க்கைப் பயன்படுத்தி ராடார் பார்வையிலிருந்து விமானத்தை மறைத்திருக்கலாம். இதுதான் அந்த பைலட்டின் மாஸ்டர் பிளான் என்கிறார். கடலில் மூழ்கிய விமானம் அதன் பிறகு கட்டுப்பாட்டுடனும், நிபுணத்துவத்துடனும் அவர் கடலில் விமானத்தை இறக்கியிருக்கலாம். அதனால்தான் விமானத்தின் பாகங்கள் எதுவும் கூட கிடைக்கவில்லை என்று அவர் டெய்லி மிரர் கட்டுரையில் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முன்பாக ஆஸ்திரேலிய போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகம் வெளியிட்டுள்ளப் பார்வையிலும் இதே கருத்தைக் கூறியிருந்தது. மேலும் மலேசிய விமானம் எம்.எச்.370-ன் விமானி அகமது ஷா மீது பெரும் சந்தேகங்களை எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது இவான் வில்சனின் கருத்துப்படி,கேபினில் பைலட் பிராண வாயு தொடர்பை துண்டித்திருக்கலாம். பயணிகள் தூங்கிக்கொண்டிருந்ததால் பிராண வாயு மாஸ்க்குகளை பயணிகள் பயன்படுத்த வாய்ப்பே இல்லாமல் போயிருக்கலாம் என்கிறார்.

1 comment:

  1. if Mr. Shaa switched off the oxygen feeder the flight cabin pressure will be in balance and the turbulence also should be in out of balance. so there are 4 to 5 alarm notifications will be activated automatically and the co pilot and flight engineer must attend the position or their seats to check the failure point. co pilot immediately inform the situation to the main tower even the captain (shaa) not agree. this is IATA regulations. if the both copilot and flight engineer are away from the cockpit then it is possible the person who lock the cockpit door and he can do anything he wish... but it is very difficult to a single man to disconnect the radar connection while auto pilot system is on. it is possible after the complete power off or disabled the generators. but if the power disconnected the flight controls and hydraulic controls also will be disabled and there is only one small propeller fan automatically will be dropped down from the fuselage to provide the alternated power to the controls and radio only for safe landings.

    anyhow, no body knows the fact of MH370 until find the cockpit voice recorder and black box.

    ReplyDelete

Powered by Blogger.