'ஹமாஸ் கனவு கண்டால் அது தவறானது'
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் , இஸ்ரேல் இடையே பல ஆண்டுகளாக பகைமை இருந்து வருகிறது. கடந்த மாதம் 8–ந் தேதி இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தொடங்கிய கடும் சண்டையில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர்.
இதில் காஸா பகுதியில் மட்டும் 1,900 பேருக்கும் அதிகமானோர் பலியாகிவிட்டனர். சுமார் 4 லட்சத்து 25 ஆயிரம் பேர் சண்டை காரணமாக காஸா பகுதியில் இருந்து இடம் பெயர்ந்தும் இருக்கிறார்கள்.
இருதரப்பினருக்கும் இடையே உள்ள மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வர எகிப்து நாடு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இரு தரப்பினரும் 5 நாட்கள் போர் நிறுத்தம் செய்வதற்கு செய்து கொண்டிருந்த ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்தது.
இது பற்றி ஹமாஸ் கூறுகையில், இஸ்ரேல் மட்டுமின்றி காஸா பகுதி பிரச்சினையை தீர்த்துவைக்கிறோம் என்று கூறி எகிப்தும் எங்களை முற்றுகையிட்டு நெருக்கடி அளிக்கிறது. எகிப்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பாலஸ்தீன அரசுதான். நாங்கள் அல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும். காஸாவில் துறைமுகம் ஒன்றையும் முந்தைய சண்டையில் சேதப்படுத்தப்பட்ட காஸா நகர விமானநிலையத்தையும் இஸ்ரேல் புதுப்பித்து தரவேண்டும் என்றனர்.
இல்லையென்றால் இஸ்ரேலுக்கு எதிரான சண்டை நீண்ட கால போராக மாறும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.
ஹமாஸ் விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து இஸ்ரேல் பிரதமர் நெடான்யகு தனது மந்திரிசபை கூட்டத்தில் நேற்று பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், தொடர்ந்து போர் நடக்கும் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் விடுத்துள்ள அச்சுறுத்தலுக்கு இஸ்ரேல் பயப்படாது. நமது மக்களின் பாதுகாப்புக்கு எந்த விதத்திலும் பிரச்சினை ஏற்படாது என்று தெரிந்தால் மட்டுமே போர்நிறுத்தத்துக்கு நாம் ஒப்புக்கொள்வோம். தொடர்ந்து தாக்குதல் நடத்துவதன் மூலம் நம்மை பணிய வைக்கலாம் என்று அவர்கள் கனவு கண்டால் அது தவறானது. நம்மை பொறுத்தவரை அமைதி திரும்பவில்லை என்றால் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்துவோம் என்றார்.
நெடயான்யகுவின் கருத்து பற்றி ஹமாஸ் செய்தி தொடர்பாளர் சமி அபுவி ஜூக்ரி கூறுகையில், முதலில் பாலஸ்தீனியர்களின் பாதுகாப்புக்கு தீர்வு கண்டால்தான் இது சாத்தியமாகும். மேலும் எங்கள் மீதான முற்றுகையை கைவிட்டு எங்களது கோரிக்கைகளையும் இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார்.
பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், எங்களது முன்னுரிமையெல்லாம் முதலில் சண்டை நிறுத்தப்பட வேண்டும், காஸா பகுதி அடியோடு அழிந்து விடக்கூடாது என்பதும்தான் என்றார்.
.jpg)
இருக்க இடமில்லாமல் நாய்களைப்போல அலைந்து திரிந்த உங்களுக்கு இடம் தந்தவர்களுக்கு கண்டிப்பாக நீங்கள் இதை செய்யத்தான் வேண்டும் உங்க தாத்தாவீட்டு சொத்தை அவங்க அபகரித்துக்கொண்டு தரமறுக்கிறார்கள் அதனால் நீங்கள் செய்யத்தான் வேணும்.
ReplyDeleteYaztiz மக்களை பாதுஹாகக ISIS போராளிகள் மீது குண்டு வீசும் அமரிக்க அரசு இச்ரேல்கு இன்னும் ஆயுதம் கொடுத்து வருகிறது.
ReplyDelete