Header Ads



இலங்கையிலும் எபோலா வைரஸ்...?

(Tm)

உலகை ஆட்டிப்படைத்துகொண்டிருக்கின்ற எபோலா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இலங்கையைச்சேர்ந்த ஒருவர் மரணமடைந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

அவரது சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். 

கண்டி, ரிக்கிலகஸ்கடையைச்சேர்ந்த பெண்ணொருவரை மரணமடைந்துள்ளார். இவருக்கு எபோலா வைரஸ் தொற்றியிருக்கின்றதா? என்பது தொடர்பில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்த அந்த பெண், சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு சென்று திரும்பிய நிலையிலேயே திடீரென மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய சடலம் தாங்கிய சவப்பெட்டி சீல் வைக்கப்பட்ட நிலையில் சுமார் எட்டு அடி குழித்தோண்டி புதைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். 

No comments

Powered by Blogger.