மேர்வின் சில்வா முதலில் தன்னைத் திருத்த வேண்டும் - இது ஞானசாரரின் உபதேசம்
அமைச்சர் மேர்வின் சில்வா முதலில் தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
19-08-2014 நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஏனையவர்கள் தொடர்பில் விமர்சனங்கள் செய்வதற்கு முன்னதாக அமைச்சர் மேர்வின் சில்வா தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும். தனது மகனை திருத்த வேண்டும்.
ஏனையவர்களை குற்றம் சுமத்துவதனை நிறுத்திவிட்டு தனது பிழைகளை அமைச்சர் திருத்திக்கொள்ள வேண்டும்.
மனிதர்கள் கடவுளர் மற்றும் குற்றவாளிகளுக்கு எந்த சந்தர்ப்பத்தில் எவ்வாறான மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்பது எமக்கு தெரியும்.
அது தொடர்பில் எவருக்கும் எங்களுக்கு பாடம் கற்பித்துக் கொடுக்க வேண்டியதில்லை.
வரலாற்றுக் காலம் முதல் மன்னர்களின் அவையில் அந்தரே போன்ற கேமாளிகள் இருந்துள்ளனர். இவர்கள் மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்துள்னர்.
அமைச்சர் மேர்வின் சில்வாவும் இவ்வாறு மக்களை மகிழ்வூட்ட கோமாளித்தனமான காரிணங்களில் ஈடுபட்டு வருகின்றார் என கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

Mervin Silva not qualified to correct any one.
ReplyDeleteFirst behave like a Budhist monk after that all will come correctly
ReplyDeleteஆடி அடங்கும் வாழ்க்கையடா
ReplyDeleteஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் கால் இல்லா கட்டிலடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
பிறந்தோம் என்பதே முகவரியாம்
பேசினோம் என்பதே தாய் மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்
ஆடி அடங்கும் .....
சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்
ஆடி அடங்கும் .....
வகுப்பார் அது போல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை (2)
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை
ஆடி அடங்கும் .....