ஹமாஸ் கடத்திய இஸ்ரேலியன் குண்டுவீச்சில் பலி
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன ஹமாஸ் இடையே சண்டை தீவிரம் அடைந்துள்ளது. இதற்கிடையே 72 மணி நேர சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது, இஸ்ரேல் ராணுவ வீரர் லெப்டினென்ட் ஹாடர் கோல்டின் (23) என்பவரை ஹமாஸ் கடத்தி சென்றதாக தெரிவித்தனர்.
அதை காரணம் காட்டி இஸ்ரேல் சண்டை நிறுத்தத்தை முறித்தது. பாலஸ்தீனம் மீது குண்டுவீச்சு தாக்குதலை தீவிரப்படுத்தியது. அப்பாவி மக்களை கொன்று குவித்தது. ஆனால், இஸ்ரேல் வீரரை தாங்கள் கடத்தவில்லை என ஹமாஸ் திட்டவட்டமாக மறுத்தனர்.
அதை ஒப்புக் கொள்ள இஸ்ரேல் மறுத்தது. இந்த நிலையில் தற்போது அது தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டுள்ளது. கடத்தப்பட்டதாக கூறப்பட்ட தனது ராணுவ வீரர் ஹாடர் கோல்டின் இஸ்ரேல் போர் விமானம் நடத்திய குண்டு வீச்சில் பலியானதாக அறிவித்துள்ளது.
இத்தகவலை இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. அதை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவ மந்திரி மற்றும் ராணுவ தலைமை அதிகாரி ரப்பி ஆகியோர் கபார் சபாவில் உள்ள ராணுவ வீரர் கோல்டின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேசி ஆறுதல் கூறினர்.
அப்போது, கோல்டினின் ஆதரவாளர்கள் நூற்று கணக்கானவர்கள் அவரது வீட்டுக்கு வெளியே கூடி நின்றனர். பலியான வீரர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ‘டி.என்.ஏ’ பரிசோதனைக்கு பிறகே இந்த முடிவை அறிவிப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை பாலஸ்தீனத்தில் காஸா மீதான தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகு அறிவித்துள்ளார். இது குறித்து அவர் டெலிவிஷனில் நேற்று உரையாற்றினார்.
.jpg)
Post a Comment