Header Ads



ஜனாதிபதிக்கு சாகும் வரையில் ஒத்துழைப்பு வழங்கவுள்ளேன் - அமைச்சர் பௌஸி

இலங்கையில் இன மற்றும் மத முரண்பாடுகள் எதுவும் கிடையாது என அமைச்சர் ஏ.எச்.எம். பௌசீ தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் நீண்ட காலமாக சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள முஸ்லிம் சமூகத்தில் வாழ்ந்து வரும் ஒரு சில நபர்கள் பிரபல்யம் அடையும் நோக்கில் பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஒரு சில தரப்பினரின் செயற்பாடுகளைத் தவிர இலங்கையில் மதக் குரோத பிரச்சினையோ அல்லது இன முரண்பாடுகளோ கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் குழப்பங்களை விளைவித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்தை பாதுகாக்கப் போவதாக கூறிக் கொள்ளும் தரப்பினர் கடும்போக்குவாதத்தை பரப்பி வருவதாகவும், பௌதத்தை பாதுகாக்க மாநாயக்க தேரர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிககாட்டியுள்ளார்.

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ரீதியில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்தை அமுல்படுத்துவதன் மூலமே சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை உறுதி செய்துகொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட மூன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களிலிருந்து தாம் தப்பித்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்றும் முயற்சியில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளதாகவும் சாகும் வரையில் அதற்காக ஒத்துழைப்பு வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். gtn

4 comments:

  1. ஆளும் கட்சியில் இருப்பை புதுப்பித்துக்கொண்டார் இன்னும் கொஞ்ச நாளைக்கு இது போதும். இது போல மனிசங்களோட மானங்கெட்ட டயலொக்ஸ் எல்லாம் கேட்டு கேட்டு புளிச்சுப்போச்சு.

    உமக்கு வேற யாரு இடம் தரப்போறாங்க. ஜனாதிபதி எத்தனை முறை ஆண்டபின் வீட்டுக்கு போனாலும் அவங்க வீட்டுக்கும் போய் நீங்க கண்டிப்பா நன்றிக்கடன காட்டணும். அப்பதான் இந்த வார்த்தைக்கு அரத்தம் சரியாகும்.

    ReplyDelete
  2. Ungalukku naam ennenru solvazu 8 kaluza vasaachi innumaa arivu varalla.... ongalayellaam... neengellaam pathura kudisayil beedi pathavaippavarhal.... indha samuzaayathukku neenga irukkurazaivida vsaavaze nallazu. ...jaffna muslim please ippadippatta news pottu nammada BP ya ethavenam....

    ReplyDelete
  3. இவரையும் இவருடைய கதைகளை செல்லி கடுப்பேத்தாதங்க மைலாட்

    ReplyDelete
  4. இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. தன் பெயருக்குப் பின்னால் தேரர் என்றும் கோட்சூட்டுக்குப் பதில் காவியும் கட்டிக்கொள்ள வேண்டியதுதான் மிச்சமிருக்கின்றது!

    ReplyDelete

Powered by Blogger.