Header Ads



தங்கத்தை பயன்படுத்தி புற்றுநோய்க்கு சிகிச்சை - ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

தங்கத்தின் மூலக்கூறுகளை ரேடியோ தெரபி சிகிச்சை தொழில்நுட்பத்தின் மூலம் கேன்சர் மூலக்கூறுகளுக்குள் செலுத்தினால் கேன்சர் நோயை குணப்படுத்தலாம் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிபுணர்கள் கூறுகின்றனர்.  கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிளியோபிளாஸ்டோமா மருத்துவ முறை மூலம் ரேடியோ தெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முறையினால் நோயாளிகளுக்கு பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுகிறது. அத்துடன் உயிர் இழப்பும் ஏற்படுகிறது. கேன்சர் நோய்க்கு மாற்று சிகிச்சை முறைகளை மேற்கொள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தங்கத்தின் மூலக்கூறுகளை வைத்து ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை மேற்கொண்டனர்.

வழக்கமான கீமோதெரபி சிகிச்சையின்போது தங்கத்தின் மூலக்கூறுடன் சிஸ்பிளாடின் என்ற நானோ மூலக்கூறையும் இணைத்து ஆய்வு மேற்கொண்டனர். இவற்றில் உருவான எலக்ட்ரான்கள், மனிதனின் உடலில் உள்ள கேன்சர் செல்களின் டி.என்.ஏ.வை அழித்தது. இதன்மூலம் கேன்சரை குணப்படுத்தலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.