Header Ads



நாம் இஸ்ரேலாக மாறத் தயாராகவுள்ளோம் - ஞானசாரர் எச்சரிக்கை..!

இலங்கையில் ஆயுதங்களுடனான முஸ்லிம் பயங்கரவாதமும் இஸ்லாமிய தீவிரவாதமும் இயங்கி வருகின்றது. இது தொடர்பில் அரசாங்கமும், உளவுப் பிரிவினரும் கவனம் செலுத்த வேண்டும். இதனை சாட்சியங்களுடன் நிரூபிக்கத் தயாராகவுள்ளதாகவும் அவ் அமைப்பு தெரிவித்தது.

கொழும்பு கிருலப்பனையிலுள்ள பொதுபலசேனாவின் தலைமையகத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்;

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ''ராஜாசனத்தில்'' அமர வைத்தது பெளத்த குருமாரும், சிங்கள பெளத்தர்களுமே ஆவார்கள். இன்று பெளத்த குருமாரையும், சிங்கள பெளத்தர்களையும் பயங்கரவாதிகளாக அமைச்சர் ஹக்கீம் உலகம் பூராகவும் பிரசாரம் செய்கிறார்.

அது மட்டுமல்லாது ஐ.நா. பிரதி ஆணையாளர் நாயகம் உட்பட இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களிடமும் நாட்டுக்கு எதிராக பெளத்த குருமாருக்கு, சிங்களவர்களுக்கு எதிராக கருத்துக்களை கூறுகிறார். அறிக்கைகளை கையளிக்கின்றார்.

காவியுடைய தரித்தோரை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இஸ்லாமிய தீவிரவாதம் தலைதூக்கும் என வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

2003ஆம் ஆண்டு ஒலுவில் பிரகடனத்தை மறைந்த அஷ்ரப் வெளியிட்டு முஸ்லிம்களை ஒன்று சேர்ப்பதாக முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கினார். இதனால் இனவாதம் தலைதூக்கியது. அதன் பின்னர் உண்மையை புரிந்துகொண்ட அஷ்ரப் தேசிய ஐக்கிய முன்னணியை உருவாக்கினார்.
     
ஆனால் இன்று ஹக்கீம் அரசாங்கத்திற்குள்ளேயே இருந்துகொண்டு முஸ்லிம்களை அச்சுறுத்தி அரசியல் செய்கின்றார். பணத்துக்காகவும், சுகபோக வாழ்வுக்காகவும், சொத்துக்களுக்காகவும் சோரம் போகிறவர்தான் ஹக்கீம். அத்தோடு மாளிகாவத்தை உட்பட கிழக்கில் முஸ்லிம் வலயங்களை உருவாக்க முயற்சிக்கின்றார்.அவர் 'காஸாக்களை'' உருவாக்கினால் நாம் இஸ்ரேலாக மாறத் தயாராகவுள்ளோம்.
    
டிலந்த பெரேரா

நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை. இவ்வாறானதோர் நிலையில் நீதியமைச்சராக பதவி வகிப்பது வெட்கம். ஆனால் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகித்துக்கொண்டு கருத்து சொன்னால்தான் உலகில் அதற்கு மதிப்பு கிடைக்கும் என்கிறார் ஹக்கீம்.

அரசுக்குள்ளிருந்து கொண்டு அமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்காக மட்டும் பயன்படுத்தும் சட்டம் ஒழுங்கு நாட்டில் இல்லையென பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியை விமர்சிக்கும் நாட்டை காட்டிக்கொடுக்கும் அரபு சதிகாரர்களின் கையாளும் தேசத்துரோகியுமான ஹக்கீமை இதற்கு மேலும் அமைச்சரவைக்குள் வைத்துக்கொள்ளக்கூடாது. உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

காவியுடை தரித்த பயங்கரவாதம் நாட்டுக்குள் உள்ளதாக விமர்சிக்கின்றார். ஆனால், நாட்டுக்குள் ஆயுதங்களுடனான முஸ்லிம் பயங்கரவாதமும் இஸ்லாமிய தீவிரவாதமும் இயங்குவதை மூடி மறைக்கின்றார். இது தொடர்பாக உளவுப் பிரிவினரும் அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும்.

இன்று உலகில் அனைத்து நாடுகளிலும் முஸ்லிம் பயங்கரவாதமும், இஸ்லாமிய தீவிரவாதமும் தலைவிரித்தாடுகிறது. அது இலங்கைக்குள்ளும் வந்து விட்டது. ஆனால் ஹக்கீம் தெரியாதவர்போல் நடிக்கின்றார்.

இலங்கையை சேர்ந்த இஸ்லாமிய பயங்கரவாதி ஷாகீர் ஹூசைன் சென்னையில் கைது செய்யப்பட்டபோது, இது இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதம் இருப்பதாக பிரசாரம் செய்வதற்கான ஒரு யுக்தி என்று சொன்னவர் ஹக்கீம்.

முஸ்லிம்களை சங்காரம் செய்வதற்கு பலமுள்ள சக்தியோடு இணைந்து நீண்ட கால சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சொல்கிறார்.

எனவே, இது தொடர்பில் உளவுப் பிரிவினர் ஹக்கீமிடம் விசாரணை நடத்த வேண்டும்.

2009ஆம் ஆண்டில் பேருவளையில் அடிப்படைவாத முஸ்லிம் குழுவுக்கும், வேறொரு முஸ்லிம் குழுவுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டது.

2 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர். ஆனால் இச் செய்திகள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டது.

ஆனால், அளுத்கமவில் பெளத்த மதகுரு தாக்கப்பட்டதும் பெளத்தர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் மறைக்கப்பட்டு முஸ்லிம்களின் பிரச்சினைகள் மட்டுமே பூதாகாரமாக்கப்பட்டது. ஊடகங்களும் இதன்போது நடுநிலை வகிக்கவில்லை.

2006ஆம் ஆண்டிலேயே முஸ்லிம் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதம் தலைதூக்கியது.

அவ்வாண்டு காத்தான்குடியில் முஸ்லிம் மதக் குழுவினரிடையே ஏற்பட்ட மோதலின் போது ஆயுதங்கள் பாவிக்கப்பட்டு 6 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

அன்றே ஆயுதங்கள் இருந்துள்ளன. இன்று 2014ஆம் ஆண்டு வந்து விட்டது. இப்போது எவ்வளவு தொகை ஆயுதங்களை சேர்த்திருப்பார்கள்.

முஸ்லிம் ஆயுத பயங்கரவாதம் இங்கு இயங்குகின்றது. இதனை நீதிமன்றத்திலும் நிரூபிக்க தயாராகவுள்ளோம் என்றும் டிலந்த பெரேரா தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய அமைப்பாளர் விதார தேரரும் கலந்து கொண்டார்.

7 comments:

  1. அழுத்காம சம்பவம் ரோட்டுக்கு இறங்கியதால்தான் சர்வதேச மயப் படுத்தப் பட்டது....துஆக்கல் கபுலா கும் ....அதை களத்தில் இறங்கி நின்று கொண்டுதான் கேக்கவேண்டும் ...நமது பதுறுக் களம் மஹ பெரிய ரோட்டுதான் ........... ..GL பிரிஸ் சொல்கிறார் முஸ்லிம்கள் இனியும் ரோட்டுக்கு இறங்கி அழுத்காமயை உலகுக்கு காட்டி விடவேண்டாம் .... நாங்கள் பட்டது போதும் என்று ஒப்பாரி வைக்கிறார் .வெளிநாட்டு அமைச்சர் ஒருவருக்குத்தான் அதன் தாக்கம் தெரியும் ...காசாவிலும் அப்படித்தான் ....... இதுவரை காலமும் மீடியாக்கள் எல்லாம் யூதர்களின் கட்டுப் பாட்டில் இருந்தது ...அவர்கள் மூடி மறைத்தார்கள் ..ஆனால் ,..இன்று ரோட்டுக்கு இறங்கியதால் மீடியாவும் பணிந்தது ... இஸ்ரேல் அமெரிக்க்காவும் பணிந்ததும் ....இஸ்ரேல் உள்ள யூதர்களும் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் ....இஸ்ரேல் சந்டியன் எல்லாம் நொண்டியன் ஆகும் காலம் வந்துவிட்டது இன்ஷா அல்லாஹ்.... இணையதளமும் FB யும் முஸ்லிம்களின் கேடயங்களில் ஒன்றாகும் நினைவில் கொள்ளுங்கள் ...

    ReplyDelete
  2. தலைவர் அஸ்ரப் சஹீதக்கப்பட்டது 2000ம் ஆண்டு ஒலுவில் பிரகடனம் எப்படி 2003ம் ஆன்டு செய்திருப்பார் என எனக்கு தெரியவில்லை..!
    அரபு சதிகாரர்கள் தான் இலங்கைக்கு சார்பாக வாக்களித்தனர் ஐநாவில் என்பதை மறந்து பிதற்றுகின்றார் டிலந்து(எழுத்து பிழை இல்லை) பெரேரா

    ReplyDelete
  3. Why government cannot arrest him? again this bugger starting violence,this statement enough to arrest him,

    ReplyDelete
  4. Ippothu iwan israwelra anusaranailthan nadakkan ippa awan waayala sollran .unmai annawanral israeil ra time table than allaam nadakkuthu srilanka wil payankarawaatham illai BBS THAN PAYANKARAWADIKAL number one theewarawaathi gnanasara gov..awana koottula pottal nattil pirachchinai illai.

    ReplyDelete
  5. From beginning we had doubt this terrorist group BALU BALA SENA(BBS) is having back support of terrorist state (Illegal baby of America) and financial support of Norway and some western countries. From this statement released by BALU BALA SENA it is visible that they are moving with the guidance of terrorist state. However innocent GAZA civilians and there land protectors (HAMAS) is now hitting by terrorist for nothing… HAMAS is having full power to save their lands and there people against invaded by terrorist state. I want to tell all the WESTERN COUNTRIES AND AMERICA you should be in neutral when you pass statement about GAZA INVADE. Instead of blaming HAMAS first u should blame and stop terrorist attacks of terrorist state and his leader Benjamin . HAMAS is not having any kind of warplanes or warships .how the stupid terrorist state can hit such a place with modern heavy equipped armed vehicles and warplane. This should be condemn and stop immediately. WE CAN NOT BLAME FOR AMERICA OR BRITAIN FOR THIS. WE SHOLD BLAME OUR OWN MUSLIM COUNTRY BACKBONE LESS LEADERS FOR THIS FIRST.SECONDLY FOR UN AND OTHER COUNTRIES…

    INSHA ALLAH HAMAS WILL WIN THE WAR AS LIKE IN UHAD WAR..

    ReplyDelete
  6. டேய் லூசு..! பெளத்த மதத்துக்கும் யூத மததத்துக்கும் வித்தியாசம் தெரியாத வம்பு..! இருடி உனக்கு இந்த ராஜபக்ச அன் கோ வை வீட்டுக்கு அனுப்பி விட்டு பார்துக்கொல்லுகிறோம்.

    மக்களே இதற்கெல்லாம் பதில் உங்கள் கையில் தான் உண்டு.

    ReplyDelete
  7. Dear Friends.

    We must think about many factors here, There were many issues among us , like many fight went off between muslim groups regarding akeetha, in kaantankudi as we know lot of fights between islamic groups, in kalmunai, Akkaraipattu, , Potuvil, and Hemmathagama, Galle, why?? these groups are fighting in mosques?????

    we have madrass producing moulavis with different direction and making different issue among us, what all these Buddhist thinking Muslims have groups and arms they are fighting and killing and attack mosques, so they have a terrorist groups, it may be threat for us.

    We must clear from our side about these kind of problem among us, as I know one time I saw a problem among two group in placing the hands during prayer on the chest or below, finally two were seriously injured and the problem was taken to Mawanalla police- The OIC was a Budist- Finally he slap for both and asked every one to keep the hands on the chest

    We muslims all get united after we were attacked by others, please find out why we have such groups to devide us, as Jamath Islami, Thowheed, Jamath Muslimeen, Thareeka, Sufi, 3 time pray groups, Thabliq, many many , and at least one fight per one prayer almost all villages using sword, steel rod , knife and so on whyyyyyyyyy??

    we must come up with concrete solution for our problem and challange with BBS we have no terror groups also request defence ministry to do search in muslims area if they need, we will cooparate with them to find out who is terrorist??, we muslims help the military during the war, when Military come to east they first come and stay in Musliim areas they can not enter in to tamil areas, why our Muslim politicians closed their mouth , also this is not the time to give foolish statement that threatening the government.

    also to BBS , when tamil groups had weapons are you all keep your hands between your legs???? and keep some things in your mouth??

    ReplyDelete

Powered by Blogger.