ரவூப் ஹக்கீம், அசாத் சாலி போன்ற அடிப்படைவாதிகளே இனவாதத்தை தூண்டுகின்றனர் - சிங்கள ராவய
தாயை நேசிப்பது போல் பிறந்த மண்ணையும் நேசிக்க வேண்டும் எனவும், அது இனவாதமாக இருக்கக் கூடாது எனவும் சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
தெஹிவளை பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் அனைவரும் எமது தாயை நேசிக்கின்றோம், அதுபோலவே பிறந்த நாட்டையும் நேசிக்கின்றோம். அதுபோல் தமது இனத்தை நேசிக்க வேண்டும், இது இனவாதம் அல்ல, இனப்பற்று.
எமது அமைப்பு இனவாதத்தை தூண்டும் அமைப்பு கிடையாது. இனவாதம் என்பது ஏனைய இனத்தையும் மதத்தையும் அழிப்பதாகும், எம்மிடம் அப்படியான கீழ் மட்ட எண்ணங்கள் இல்லை.
நாட்டில் இனவாதத்தை தூண்டுவது நாமல்ல, ரவூப் ஹக்கீம், அசாத் சாலி போன்ற அடிப்படைவாதிகளே இனவாதத்தை தூண்டுகின்றனர்.
சிங்கள பௌத்தர்களோ, பிக்குமாரோ நாட்டில் அடிப்படைவாதத்தை தூண்டுவதில்லை எனவும் தயாரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment