Header Ads



பயங்கரவாத இஸ்ரேலிய இராணுவத்தில் வெளிநாட்டினரும் இணைவு

காசா மோதலில் இஸ்ரேல் இராணுவத்தில் இருந்த இரு அமெரிக்க நாட்டு வீரர்கள் கொல் லப்பட்டிருப்பதன் மூலம் உலகெங்கு முள்ள யு+தர்கள் இஸ்ரேலுக்காக யுத்தத்தில் ஈடுபட இணைவது உறுதியாகியுள்ளது.

இவ்வாறான இராணுவத்தை இஸ் ரேலில் தனிப்படை என்று அழைக்கப் படுகிறது. சிட்னி, லண்டன், லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் இவ்வாறு இஸ்ரேல் இராணுவத்தில் இணைவ தாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் இராணுவத்தில் இவ்வாறு சுமார் 2500 இலிருந்து 6000 வரை தனிப்படை வீரர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. உலகெங்கும் உள்ள யு+தர்கள் தன்னார்வ அடிப்படையில் இஸ்ரேல் இராணுவத்தில் இணைய அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதில் பலஸ்தீன போராளிகளால் கொல்லப்பட்ட அமெரிக்கரான 24 வயது மெக்ஸ் ஸ்டெயின்பார்க் ஆறு மாதங்களுக்கு முன்னரே முதல் முறை இஸ்ரேலுக்கு சென்றுள் ளார். அதேபோன்று மற்றுமொரு அமெரிக்கரான 21 வயது நிஸ்ஸிம் சீன் கார்மலி நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்ரேல் சென்றிருக்கிறார்.

No comments

Powered by Blogger.