Header Ads



ரமழான் தினத்தில் பொருட்கள் வாங்க நிலையில், குண்டு வெடிப்பு - 50 பேர் மரணம்

கிழக்கு ஆப்கானிஸ்தானின் பக்டிகா மாகாணத்தின் சனநெரிசல் மிக்க சந்தை பகுதியில் நேற்று இடம்பெற்ற கார் குண்டு தாக்கு தலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

சந்தைப் பகுதிக்குள் ஊடுருவிய வாகனம் வெடிக்கச் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள் ளனர். தாக்குல் இடம்பெறும் வேளை குறித்த சந்தை பகுதி சனநெரில் கொண் டதாக இருந்துள்ளது. 

பக்டிகா மாகாணம் பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள கொந்தளிப்பு மிக்க பழங்குடி பகுதியாகும். இந்த குண்டுவெடிப்பில் மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பு கோரியுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கடைகளில் பணிபுரிபவர்களும் ரமழான் தினத்தில் பொருட்கள் வாங்க வந்தவர்களுமாகும்.

No comments

Powered by Blogger.