''எனது தலைமையில் 21 தேர்தல்களில் ஐ.தே.க. தோல்வியடைந்ததாக கூறுவது உண்மை இல்லை''
மஹிந்தவின் ஆட்சியை கவிழ்க்கூடிய அரசியல் பலம் ஐ.தே.க. பீடத்திடம் மாத்திரமே உள்ளது. எனவே, அரசின் அடாவடித்தனத்தை முறியடிக்க அனைவரும் கட்சி பேதங்களை மறந்து ஐ.தே.க. கீழ் அணி திரள்வோம் என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கேகாலை ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
எனது தலைமையின் கீழ் நடைபெற்ற 21 தேர்தல்களிலும் ஐ.தே.க. தோல்வியடைந்ததாக ஒரு சிலர் கூறி வருகின்றனர். அதில் எவ்வித உண்மையும் இல்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை வலுவிழந்து வருகின்றது. கொடுத்த வாக்குகள் எவையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தால் மக்கள் செய்வதறியாது திண்டாடுகின்றனர்.
எதேச்சதிகாரமிக்க இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென மக்கள் கங்கணம் கட்டி வருகின்றனர். அந்த வகையில் அவர்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றக்கூடிய அரசியல் பலம் ஐ.தே.க. விடம் மாத்திரமே உள்ளது. அரசின் அடாவடித்தனத்தை முறியடிக்க மக்கள் படை அணி ஒன்றை உருவாக்கி அனைவரும் கட்சி பேதங்களை மறந்து ஓரணியில் திரளுவோம் என்றார்.

ஓகோ! ஒருவேளை 22 ஆக இருக்குமோ..?
ReplyDelete