Header Ads



நுவரெலியாவில் 5 பேருக்கு மரண தண்டனை

நுவரெலியாவில் 2000 ஆம் ஆண்டில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்படும் ஐவருக்கும் நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி ஈ.டபிள்யு.எம்.லலித் ஏக்கநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (15) மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

குறித்த நகைக்கடையில் 756,714 ரூபாய் தங்க நகை கொள்ளையிட்டமை மற்றும் கொலை செய்யப்பட்டமைக்கான சான்றுகள் நிருபிக்கப்படதன் பின்னரே இத் தண்டனை வழங்கப்பட்டது.

மேலும், இக்கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரையும் விடுதலை செய்யுமாறும் தண்டனை வழங்கப்பட்டவர்களை கண்டி தும்பர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லுமாறும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

2000 ஆம் ஆண்டு பெப்ரவரி 12ஆம் திகதி மாலை நுவரெலியா புதிய கடைத்தெருவில் உள்ள பிரபல நகைக்டையான அருணா நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்காக கும்பலொன்று அத்துமீறி நுழைந்துள்ளது.

No comments

Powered by Blogger.