Header Ads



''இடிப்பது பள்ளியாக இருந்தாலும், இருப்பது அமைச்சர் கதிரையாக இருக்கவேண்டும்''

(Mohamed Hanees)

நீண்டதாக, விளக்கமாக சொல்லுவதற்கு எண்ணங்கள் சம நிலையாக  இல்லை, உங்கள்  வாசிப்புகளுக்கு  ரசனை  ஊட்டுவதற்கு  முழு  சூய  நினைவிலும்  இல்லை எந்த முஸ்லிம் இளைஞனும்.

மறைந்த தலைவர்  எம் . எச் . எம் . அஷ்ரப்  அவர்கள்  முஸ்லிம்களுக்கான  ஒரு  தனியான கட்சியை  ஊருவாக்குவதர்க்கான  முக்கிய  குறிக்கோள்களில்  ஓன்று , இலட்சக்கணக்கான  தமிழ்  சகோதரர்கள் மடிந்து  போனதை  போல்   அல்லாமல்  முஸ்லிம்  சமூகத்தையும் , முஸ்லிம்  இளைஞர்களையும்  சாத்வீக  முறையில்  அரசியல்  மயப்படுத்தி  தமது  உரிமைகளையும் , சலுகைகளையும்  அடைய  வேண்டும் . அதில்  அவர்  மறையும்  வரை  வெற்றியும்  கண்டார் .

அவர் தலைமைத்துவ  பாசறையில்  வளர்ந்தவர்கள்  என்று  தங்களை  கூறிக்கொள்ளும்  நம்  எண்ணிக்கை  இல்லா  தலைவர்கள்  எங்கள்  சமூகத்தை  பாதுகாக்க  தவறி  விட்டார்கள், முயற்சிக்கவும்  இல்லை.

இவர்களை  மக்கள்  தெரிவு  செய்தது  வெறுமனே  தார்  வீதிகளுக்கும், சீமெந்து  கட்ட்டிடங்களுக்கும்  மாத்திரம்  என்று  நினைத்துவிட்டார்கள்.

சுமார் இரண்டு வருடமாக புகைந்து கொண்டு இருந்த இந்த பிரச்சினைகள் ஒரு  நாள்  கொழுந்து  விட்டு  எரியும்  என்று  நமக்கு  எல்லோருக்கும்  தெரியும், ஆனால்  நமது  ராசா  தலைவர்க்களுக்கு  புரியவில்லை.

என்னை  பொறுத்தவரையில்  நாம்  பறிகொடுத்த  உயிர்களுக்கும், அளிக்கப்பட்ட சொத்துகளுக்கும் போருப்புதாரிகளும், பதில் கூறவெண்டியவர்கல் நம் நாட்டு அரசாங்கமோ அல்லது பொது பல செனவோ அல்ல நமது இந்த தலைவர்கள் தான் இப்போது மாத்திரம் அல்ல மறுமையிலும் கூட.

மின்னல் ரங்கா சொல்லுவது போல் இடிப்பது பள்ளியாக இருந்தாலும் இருப்பது அமைச்சர் கதிரையாக இருக்கவேண்டும் என்பதா, 

எங்களுக்கு என்று தனியான மாகாண சபை, நாங்கள் நினைத்தை சாதிப்போம் என்று மார்தட்டிகொண்டு இருக்கும் நமக்கு ஒரு கண்டின எதிர்ப்பு பிரரனை ஒன்றைகூட நிறைவேற்ற முடியாமல் இருக்கின்றது, இது ஒரு மானக்கேடான சம்பகமாகும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களின் பிரரனையை ஒரு அரசாங்க செயலாளர் தடுப்பதாகும். 

எரிந்து  முடிந்த  சாம்பல்களின்  மேல்  இவர்களின்  காலடி  தடங்களை  படுத்தியும், இத்தாஹ்  வீட்டு துக்க விசாரணையுடன் ( இவர்கள் என்ன மரண விசாரணை அதிகாரிகளா) இவர்களின் சமூதய கடப்பாடு முடிந்தது விடுகின்றன,

“இன்னும் சில தலைவர்கள் குதிரை சவாரி போனவர்கள் வீடு திரும்பவில்லையாம்”

முழு, அரை, கால் அமைச்சர்களே, சாம்பலான உடமைகளுக்கு நஷ்ட ஈடு தருவதற்கு நீங்கள் தேவை இல்லை, அதை காப்புறுதி நிறுவனம் தந்து உதவும்,
இடிந்த பள்ளிவாசல்களையும், வீடுகளையும் மீளமைப்பதர்க்கு  நீங்கள் தேவை இல்லை, எத்தனையோ சமூக நலன் வெளிநாட்டு உள்நாட்டு தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன.

உங்கள் கடைமைப்பாடு என்னவென்பது என்று உங்களுக்கும் தெரியவில்லை, உங்களை என்ன செய்வது என்று எங்களுக்கு புரியவில்லை.

புழக்கத்தில் இல்லாத நாணயங்களாக போய்கொண்டு இருக்கிறிர்கள், அப்படியோ ஒரு நாள் மறைந்தது போய்விடுவீர்கள்.

நிலைமை மிக மோசமாக போய்கொண்டு இருகின்றன, நமது இளைஞர்கள் கண்ணீரோடு சேர்த்து கோபத்தையும் நெருப்பாக காக்கிகொண்டு இருக்கிறார்கள். ஒரு சிலரின் தவறுகளால் வந்த கோபம் ஒரு இனத்தின் மீது வெறுப்பாக மாறுவதற்கு முன் தடுத்து நீருத்துங்கள்,

இல்லாவிடின் இதன் முடிவுகளும் விளைவுகளும் மிகவும் விவரிதமாகவும்  எதிபார்க்காதாகவும் இருக்கும்.

ஆல்லஹ்தான்  என் எல்லோரையும் பாதுகாக்க வேண்டும். ஆமீன்.

3 comments:

  1. இவர்கள் பொது பல சேனாவின் தலைவரை விட கேவல மாணவர்கள் என்பதை ஹக்கீமின் குள்ள வரியில் புரிய வில்லையா முக்கியமாக கிழக்கு மாகான முஸ்லிம்கள் இன்னமும் மறைந்த அச்ரப்ப் எண்ணி எண்ணி ஹக்கீமை ஆதரித்து முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்கிறார்கள்.

    அவரின் சொந்த ஊரில் ஆசாத் சாலி 50000 மேற்பட்ட வாக்குகளை எடுக்க இயலும் என்றால் இவருக்கு என் 5000 எடுக்க முடியல. அங்குள்ள முஸ்லிம்கள் இவரை நன்றாக விளங்கி வைத்து இருக்கீறார்கள்

    கிழக்கு முஸ்லிம்கள் ஹக்கீமின் விடயத்தில் மண் குதிரைகள் ஆகி விட்டார்கள்

    ReplyDelete
  2. இதை தான் சேகு சொன்னார் போராளி எல்லாம் கபுராளி ஆகிட்டர்கள் என்று

    ReplyDelete
  3. சிரித்துக் கொண்டு அழ வேண்டிய நிமைக்கு நமது அனைத்து முஸ்லிம் கட்சி தலைவர்களும் எம் அனைவரையும் தள்ளிவிட்டார்கள். ஹக்கீமுக்கு அரசாங்கத்தை விட்டு விலகினால் கட்சியிலிருக்கும் மற்றவர்கள் குரங்கின் வேலையை காட்டிவிடுவார்களோ என்ற அச்சம். அதாவுல்லாவுக்கு அடுத்த தேர்தலில் Bonus sheetக்கு ஆப்பாகி விடுமோ என்ற பயம். ரிஸாட் அவர் selfish. எதற்கும் தயார். எனது அன்பான அல்லாஹ்வின் அடிமைகளே றப்புல் ஆலமீன் எல்லாவற்றையும் நன்கு அறிந்தவன் & அறிகிறவன். தேவைகளை அவனிடமே முறையிடுங்கள். தற்போது பாராளுமன்றத்தில் எத்தனையோ Ministers & mp's இருந்தும் என்ன பயன். My small request from all muslims, please avoid any election in the future. If we are select any one not thinking about we. Example fast two months inside we will face many troubles from budhist terrorist. So then nobody's help to us without allah. So please all of Muslims about my request.

    ReplyDelete

Powered by Blogger.