Header Ads



'இனவெறி ஆட்டத்திற்கு அஞ்சி மனம் சோர்ந்து விடாதீர்கள்' - ரிஸ்வான் மதனி


அளுத்கம, பேருவளை ஆகிய பிரதேசங்களில் அப்பாவி முஸ்லிம் மக்களுக:கு எதிராக அரங்கேற்றப்பட்ட இனவெறியாட்டத்தைக் கண்டு இன்று உலகம் இதயம் உருகி இலங்கை அரசுக்கு எதிராக கண்டனக் கணைகளை விடுத்த வண்ணம் உள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வாறான இனவெறி ஆட்;டத்தை இவர்கள் தொடர்ந்து செய்யக் கூடும். எனவே இதற்கு முழுமையான முற்றுப் புள்ளியொன்றை வைப்பதற்கு இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்களும், முஸ்லிம் இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும் முன்வருதல் வேண்டும் என்று தைபா கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

இந்தக் கலவரம் அல்லாஹ்வின் ஏட்டில் எழுதப்பட்டது என்பதை நாம் உறுதியாக நம்பியவர்கள் என்ற அடிப்படையில் நமது உயிர் இழப்புக்கள், சொத்தழிப்புக்கள், பொருள் கொள்ளைகள் என நீடித்துச் செல்லும் அனைத்தும் நமக்கு நன்மயாக அமையட்டுமாக!

'ஒரு முஃமின் ஒரு புதரில் இரண்டு தடவைகள் தீண்டப்படமாட்டான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (புகாரி).

ஒரு முஃமின் தன்னை இழிவுபடுத்திக் கொள்ளமாட்டான் என உமர் (ரழி) அவர்கள் குறிப்பிடுவார்கள். அதனால்; இஸ்லாத்தின் மூலம் நாம் பெற்ற கண்ணியத்தை இழக்கக் கூடாது என்பதில் நாம் கரிசனையாக இருப்பதால் நமது எதிரிகளால் பெறுமதிவாய்ந்த நமது உடைமைகள் அழிக்கப்பட்டு, உயிர்ச்சேதங்கள் விளைவிக்கப்பட்ட நிலையில் இன்னும் இன்னும் குழியில் வீழ்ந்திடாது  நம்மை நாம் தற்காத்துக் கொள்ள கடமைப்படட்டுள்ளோம்

வரும் காலங்களில்  இவ்வாறான அசாதாரண சூழ்நிலைகள் ஏற்படாது என்று அறுதியிட்டுக் கூற முடியாது. ஏனெனில் இறைமறுப்பாளர்கள் என்போர் அதிகாரத்தை தமது கையில் எடுத்து, ஈவரக்கமின்றி மனிதர்களைக் கொலை செய்வது என்பது வரலாற்றில் நிரூபணமாதாகும்.

ஆகவே எதிர்வரும் காலங்களில் அதனைச் செய்யமாட்டார்கள் என்று நம்பவது (குஃப்ர) இறை நிராகரிப்பில் நம்மை இட்டுச் செல்லும் காரியமாகிவிடும். அதனால் எதிர்வரும் காலங்களிலும் இதை இன்னும் நவீனமாகக் கையாள அல்லாஹ்வின் எதிரிகள் முயற்சிப்பார்கள் என்பதை நாம் நம்பவேண்டும்.

அதற்காக நரகவாதிகளாக இந்தக்காடையர்களுக்கு நாம் அஞ்சி நமது மனங்களை நாம் பலவீனப்படுத்திவிடக் கூடாது.

அதனால் பின்வரும் அறிவுரைகள் பற்றி சிந்திப்பது நன்மையளிக்கும் விடயங்களாகும்.

நாமே உயர்ந்தவர்கள், சுவனத்தின் வாரிசுகள். 
وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ ஜآل عمرانஃ139ஸ
நீங்கள் சஞ்சலம் அடைய வேண்டாம். நீங்கள் கவலை கொள்ளவும் வேண்டாம். நீங்கள் நம்பிக்கை கொண்டவராக இருப்பின் நீங்களே உயர்ந்தவர்கள். (ஆலு இம்ரான்: 139)
நமக்காவே இந்த உலகம் வாழ்கின்றது. 'அல்லாஹ் என்று கூறும் ஒரு மனிதன் இருக்கும் வரை மறுமை நாள் வராது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்).
நமது தயவில்தான் காபிர்களுக்கும் உயிர்வாழ்வாதாரம் வழங்கப்படுகின்றது என்பது இதன் பொருளாகும்

(1)     பொது நன்மை கருதி விட்டுக் கொடுத்தல்.
சமூகத் தலைவர்கள்,  ஆர்வலர்கள், பொறுப்பாளர்கள் போன்றோர்  முஸ்லிம் சமூகத்தை அழிவில் இருந்து காப்பாற்ற முன்வர வேண்டும். முடிவுகள் சமூகத்திற்கு நன்மைக் கொண்டுவரும் விதத்தில் அமைய வேண்டுவே தவிர, ஒட்டு மொத்த சமூகத்தையும் அழிவில் தள்ளவிடும்படியான நிகழ்கள் எதுவும் ஆரோக்கியமற்றதாகும் என்பதை பின்வரும் வரலாற்று நிகழ்வு முக்கிய பாடமாகும்.

ஹுதைபியா உடன்படிக்கை கச்சாத்திடப்படப் போவது பற்றிய விபரங்களை அறிந்த உமர் ரழி அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே நாம் போர் செய்து நாம் கொலை செய்யப்பட்டால் எமது தரப்;பினர் சுவனவாதிகள்தானே என்றார். அதற்கு நபி  (ஸல்) அவர்கள் ஆம். என்றார்கள். எதிரணயினராக காபிர்கள் கொலை செய்யப்பட்டால் அவர்கள் நரகக் கொள்ளிகள் தானே என்றார். நபி  (ஸல்) அவர்கள் ஆம். என்றார்கள். அப்படியானால் நாம் காபிர்களுக்கு அடிபணிந்து செல்லவேண்டும் என்ற தேவை என்ன எனக் கேட்ட போது ' நான் அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றார்கள். (புகாரி).

(2)     ஆலோசனை மன்றம் அமைத்து செயற்படல்.
'அவர்களது காரியங்கள் ஆலோசனையாகும்'  (அஷ்ஷுரா: வசனம்: 38) எனவே நமது அனைத்து காரியங்களும் ஆலோசனையின் அடிப்படையில் அமைத்து செயல்படுவது காலத்தின் தேவையாகும்.

இதன் மூலம் அடிக்கடி நமக்கெதிராக திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்கள், பொருளாதார அழிவுகள் உயிர்ச் சேதங்களில் போன்ற விரோதிகளின் தீங்குகளில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள உதவும்.

ஷுரா என்பது காத்திரமான முடிவுகள் பெறப்பட வழிவகுக்கும். அதனால் இயக்க வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று சிந்திக்கின்ற நிலை வரவேண்டும்.
நாம் இந்த நாட்டின் சிறுபான்மயினர் என்ற அடிப்படையில் சிறுபான்மையினர் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது போது பிறிதொரு சிறுபான்மையை இனத்துடன் இணைந்து நடாத்துவதன் மூலமும் நமது இருப்பை நாம் உறுதி செய்து, உரிமையுடன் வாழும் நிலையைத் தோற்றுவிக்கவும் செய்யலாம்.

(3)     எதிரியை பலம் இழக்கச் செய்தல்.
இது ஒரு பெரும் ஆயுதமாகும். பொருளாதாரத்தில் தன்னிறைவு கண்ட ஜப்பான் போன்ற நாடுகள் இரண்டாம் உலகமகா யுத்தத்தில் தோல்வி அடைந்தது காரணமாகும்.

தேசியக் கொடி ஏற்றுவதாலோ, பொஷன், வெசக் போன்ற பண்டிகைக்கு பணம், உணவு கொடுப்பதாலோ உங்கள் எதிரி நண்பனாகமாட்டான். இதை அளுத்கம கலவரம் நன்கு உணர்த்தியுள்ளது. 

அதனால் பொருளாதார ரீதியாக உங்கள் எதிரியை உங்களிடம் மன்றாடும் நிலையை உருவாக்குங்கள். அவர்களது வியாபாராத் தளங்களை வாடகைக்குப் பொறுவதை விடுத்து உங்கள் பிரதேசங்களில் வர்த்தக நிலையங்களை உருவாக்குகங்கள். கொஞ்சம் வியாபாரம் செய்தாலும் அல்லாஹ்வின் அளப்பு போதுமானது என்று உணருங்கள். இது என்னால் முன்வைக்க முடியுமான சில கருத்துக்களாகும்

No comments

Powered by Blogger.