ஊரடங்கு சட்டத்திற்கும் அடங்காத பௌத்த பேரினவாத வெறி – நேற்றிரவும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்
முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள, பௌத்த பேரினவாதக் குண்டர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருக்கும் போதும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றுமுன்தினம் மாலை தொடக்கம், அளுத்கம, பேருவெல நகரங்களில் காவல்துறை ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று முழுவதும், ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்த போதிலும், ஆங்காங்கே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.
நேற்றிரவு, வெலிப்பன்ன என்ன இடத்தில், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தச் சென்ற சுமார் 300 பேர் கொண்டு குழுவொன்றின் மீது, சிறிலங்கா காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசிக் கலைத்துள்ளனர்.
அதேவேளை, வெலிப்பன்ன பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், வெலிப்பன்ன நகர மத்தியில் முஸ்லிம்களின் மூன்று வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், 7 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இதனை பொலிஸ் ஊடகப் பிரிவு இன்னமும் உறுதிசெய்யவில்லை.
நேற்று பிற்பகல் சம்பவ இடத்துக்குச் சென்ற தடயவியல் நிபுணர்கள் இரத்தக்கறைகள், மற்றும் வன்முறைகள் நடந்த இடங்களில் தடயங்களைச் சேகரித்துள்ளனர்.
இன்னமும் சில இடங்களில் பதற்றம் நிலவுகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ள சிறிலங்கா காவல்துறைப் பேச்சளார் அஜித் றோகண, நிலைமையை இயல்புக்குக் கொண்டு வரும் நடவடிக்கையில், சிறிலங்கா காவல்துறையும், இராணுவமும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அளுத்கம பின்ஹென்ன பகுதியில் நேற்றிரவு மற்றொரு குண்டர் குழுவின் மீது சிறிலங்கா இராணுவத்தினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசிக் கலைத்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, பௌத்த, மற்றும் முஸ்லிம் மத தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மோதல்களை முடிவுக்கு கொண்டு வருமாறு நேற்று அழைப்பு விடுத்துள்ளனர்.
அத்துடன் பொதுபல சேனாவின் வன்முறைகளை சிறிலங்கா அரசாங்கம் தடுக்கத் தவறிவிட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
.jpg)
இந்த ஊரடங்க சட்டம் முஸ்லிம்களுக்கு தான் தேரருக்கு இல்ல இதற்கு பின் அரசாங்கம் இருக்கிறது என்பது தெரிந்து இருந்தும் எமது பச்சோந்திகள் இன்னமும் இந்த முஸ்லிம் சமுகம் நம்புவத விட மாவின் சில்வா வ நம்பலாம்
ReplyDeleteMervin Silva ulaga maga nadigan .. avan thottilai aattivittu thodayai killubavan.. don't trust any politicians. Believe Allah only
ReplyDelete