Header Ads



உலகில் அமைதியான நாடுகளின் பட்டியலில், சிறிலங்கா மேலும் பின்னடைவு

லகில் அமைதியான நாடுகளின் பட்டியலில், சிறிலங்கா மேலும் பின்னடைவு கண்டுள்ளது. 

2014ம் ஆண்டுக்கான பூகோள அமைதிச் சுட்டி (Global Peace Index) அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 

இதில், சிறிலங்கா 105வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டில், சிறிலங்கா 103வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டில் இரண்டு இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது. 

தெற்காசியாவில் அமைதியான நாடாக பூட்டான் உலகளவில் 16வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 

அதேவேளை, இந்தியா 143வது இடத்தில் உள்ளது. 

இந்தப் பட்டியலில், மிகவும் அமைதியான நாடுகளாக- ஐஸ்லாந்து, டென்மார்க், ஒஸ்ரியா, நியூசிலாந்து, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகள் முன்னிலை இடங்களைப் பிடித்துள்ளன. 

கடைசியான 162வது இடத்தை, ஈராக், சொமாலியா, சூடான். தென் சூடான், கொங்கோ, மத்திய ஆபிரிக்க குஎடியரசு, சிரியா ஆகிய நாடுகள் பங்கு போட்டுள்ளன.

No comments

Powered by Blogger.