முஸ்லிம்களுடைய தலைவர்கள் உணர்ந்துதான் செயற்படுகின்றார்களா..? விக்னேஸ்வரன்
முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெற்றிருக்கும் வன்முறைச் சம்பவங்கள் உண்மையில் இனங்களுக்கிடையில் விரிசலை உருவாக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் நடைபெற்றிருக்குமானால் அதனை வன்மையாக கண் டிப்பதாக தெரிவித்திருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், 83 களில் தமிழ் மக்களுக்கு நடந்தவையே இன்றைக்கு முஸ்லிம் மக்களுக்கு நடக்கின்றதோ என தாம் சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு அளுத்கம பகுதியில் கடந்த சில தினங்களாக சிங்கள முஸ்லிம் இனங்களுக்கிடையில் உருவாகியிருக்கும் முறுகல் நிலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நடைபெற்றிருக்கும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விபரங்களையும் நான் அறிந்திருக்கவில்லை. எனவே அந்த விடயம் தொடர்பாக ஆழமான முறையில் என்னால் கருத்துச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் தற்காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு பல பாதிப்புகள் உண்டாக்கப்படுவதை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றார்கள். ஆனால் முஸ்லிம் மக்களுடைய தலைவர்கள் இவ்விடயங்கள் தொடர்பாக உணர்ந்துதான் செயற்படுகின்றார்களா எனத் தெரியவில்லை. மேலும் 83 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கு நடந்ததைப் போன்றே இப்போது முஸ்லிம் மக்களுக்கும் நடக்கின்றதா? என நாம் சந்தேகிக்கவேண்டியதாக இருக்கின்றது. நான் சிறுவனாக இருந்தபோது அதாவது சுதந்திரமடைவதற்கு முன்னர்; தமிழ் மக்கள் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்திருந்தார்கள். அப்போது யார் வேண்டுமானாலும் எங்குவேண்டுமானாலும் செல்ல முடியும். வாழ முடியும். என்ற நிலையே காணப்பட்டது. பின்னர் தெற்கிலிருந்து தமிழ் மக்கள் வட க்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விரட்டியடிக்கப்பட்டார்கள். அவ்வாறான ஒரு செயற்பாடே இன்றைக்கும் நடப்பதாக உணர்கின்றோம். எது எவ்வாறாக இருந்தாலும் முஸ்லிம் சிங்கள மக்களுக்கிடையில் இன விரிசலை உண்டாக்கும் வகையில் அல்லது முஸ்லிம் இனத்தவர்களை முழுமையாக பாதிப்படையச் செய்யும் வகையில் மேற்படி வன்முறைச் சம்பவங் கள் திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்டிருக்குமானால் நாங்கள் அதனை வன்மையாக கண்டிக்கின்றோம். இவ்வாறான சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் இருக்க வலியுறுத்துவோம் என்றார்.
.jpg)
எண்களின் கதிரைக்கு ஏதும் என்றால் எங்களால் தாங்க முடியாது வேறாவது கேளுங்க செய்கிரம் ராஜினாமா அப்படி இப்படி என்று பேசாதிங்க சார் ப்ளீஸ்
ReplyDeleteithu oru thittamitta thaakkuthal endru kooda theriyatha unga ufathesaththa nayku podunga sir... Thank you
ReplyDelete