Header Ads



ஹொரணையில் முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாட சதி, சிங்கள சகோதரர் தடுத்துநிறுத்தினார்

அளுத்கம, தர்கா நகர் பிரச்சினையை சாட்டக வைத்து நேற்று  அதிகாலை சில குண்டர்கள் முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடுவதற்காக ஹொரணை நகரில் முஸ்லிம் கடைகளுக்கு முன் ரயர்களை எரித்துள்ளனர். 

ஹொரணை நகரத்திற்குள் குழப்ப நிலையை ஏற்படுத்தி முஸ்லிம் வியாபார நிலையங்களை தீயிட்டுக் கொளுத்திவிட்டு, சொத்துக்களை மிகவும் சூட்சுமமான முறையில் கொள்ளையிடுவதற்கு சில காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியை ஹொரணை பொலிஸார் நொடிப் பொழுதில் முறியடித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளமை தெரியவந்துள்ளது. ஹொரணை நகரத்திற்குள் இருக்கும் ஹாட்வெயர் கடை ஒன்றின் முன் அதிகாலை சிலர் சூட்சுமமான முறையில் கடை அருகில் டயர்களை பெற்றோல் ஊற்றிக் கொளுத்தி விட்டு கொள்ளையிடுவதற்காகத் கடைக்கு பரவும் வரை காத்திருந்தனர். அந்தவேளை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் சம்பவத்தை பொலிஸ் அவசர தொலைபேசி மூலம் (119) தெரிவித்ததைத் தொடர்ந்து ஐந்து நிமிடத்துக்குள் ஸ்தலத்திற்கு விரைந்த ஹொரணை பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஏற்படவிருந்த பாரிய இழப்பீட்டை கட்டுப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

2 comments:

  1. வர வர களவாடிகளின் தலையோங்கல் மிகவும் மேலோங்கியவண்ணமே உள்ளன. இதை முஸ்லிம்கள் தடுத்தால் சிங்களவர்களை தாக்கிவிட்டார்கள் என்றும் நம்மை அழிக்கின்றார்கள் ஆகமொத்தம் சிறுபான்மையை அழிக்கவேண்டும் அதுதான் குறி.

    ReplyDelete

Powered by Blogger.