Header Ads



மருத்துவ செலவுக்கு புவி றஹ்மதுழ்ழாஹ் உதவி கேட்கிறார்

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுழ்ழாஹி வபறகாதுஹூ

புதிய காத்தான்குடி 06, அப்றார் நகர் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட 58 வயதுடைய முஹம்மது இப்றாஹீம் றஹ்மதுழ்ழாஹ் (புவி. றஹ்மதுழ்ழாஹ்) ஆகிய நான் கடந்த ஏப்ரல் மாதம் 03ம் திகதி முதல் தடவையாக கடுமையான நெஞ்சுவலிக்கு உள்ளாகி மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டேன்.

அங்கு நான்கு தினங்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றபோது, எனது இதயத்தில் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டதாக அறிய முடிந்தது. வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பிய நான் குடும்ப உறவினர்கள் பலரினதும் ஆலோசனைக்கமைய கொழும்புக்குச் சென்று LANKA HOSPITALS வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்திய நிபுணர் திரு. S. மித்ரகுமார் அவர்கள் மூலம் angiogram பரிசோதனை செய்தபோது எனது இருதயத்திலுள்ள பிரதான நாளமொன்றில் 100 வீதமான அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனை மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்துவதற்கு 500,000 ரூபா பணம் தேவையென்றும் தெரிவித்ததுடன் ஜனாதிபதி நிதியிலிருந்தும் இச்சிகிச்சைக்கான உதவித்தொகையை பெறுவதற்கான அறிக்கைகளையும் தந்துள்ளார்.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து உதவித் தொகையைப் பெறுவதற்காக நான் விண்ணப்பித்துள்ள போதிலும், சிகிச்சைக்காகத் தேவைப்படும் முழுத்தொகையையும் ஜனாதிபதி நிதியிலிருந்து வழங்க மாட்டார்கள் என்றும், வைத்திய நிபுணரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் மருத்துவச் செலவுத் தொகையில் ஒரு குறிப்பிட்டளவு தொகையையே வழங்குவார்கள் என்றும் இவ்வாறு உதவி பெற்ற பலரும் தெரிவிக்கின்றனர்.

அதனால் சமுர்த்தி உதவி பெறும் வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பஸ்தனான நான் முஸ்லிம் சகோதர சகோதரிகளிடமிருந்து எனது வைத்தியச் செலவுக்கான உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் எண்ணத்தோடு அழ்ழாஹ் அளவில் ஆதரவு வைத்தவனாக இந்த வேண்டுகோளை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.

நான் ‘வார உரைகல்’ எனும் வாராந்தப் பத்திரிகையை வெளியிட்டு வந்ததன் மூலமே எனது குடும்பத்தின் அன்றாடத் தேவைகளையும், எனது பிள்ளைகளின் கல்வித் தேவைகளையும் அழ்ழாஹ்வின் கிருபையால் பூர்த்தி செய்து வந்தேன். கடந்த மாதம் 18ம் திகதி எனது 300வது பத்திரிகையை வெளியிட்டதன் பின்னர் எனது சுகவீனம் காரணமாக அம்முயற்சியைத் தொடர முடியவில்லை.

எனவே, என்மீது அன்பும், அனுதாபமும் கொண்டுள்ள சகோதர சகோதரிகள் அழ்ழாஹ்வின் திருப்தியை மாத்திரம் கருத்திற்கொண்டு எனது வைத்திய
சிகிச்சைக்காக தங்களால் முடிந்த உதவித் தொகைகளை பின்வரும் எனது வங்கிக் கணக்குகளில் ஏதாவது ஒன்றின் மூலம் அனுப்பி வைத்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

எல்லாம் வல்ல அழ்ழாஹ், இவ்வாறான பாரிய நோய்களில் இருந்து தங்களையும், தங்களின் குடும்பத்தார்களையும் பாதுகாக்க வேண்டும் எனவும், எனக்கும் இச்சிகிச்சையின் மூலம் பூரண சுகத்தை அளிக்க வேண்டும் எனவும்
பிரார்த்திக்கின்றேன்.

இவ்வண்ணம்,
தங்களின் உதவியை எதிர்பார்க்கும்,
புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் – காத்தான்குடி
04.05. 2014

எனது வங்கிக் கணக்குகளின் விபரங்கள்:

M.I. Rahmathullah

1) Saving A/C No: 065 2001 6001 9364 – People’s Bank, Kattankudy

2) Saving A/C. No : 8003932- Bank of Ceylon, Kattankudy

3)  Saving A/C. No: 8193000734 Commercial Bank, Kattankudy



3 comments:

  1. Inthe manitherin suhathukkaha mudinthalavu help pannuwathu oru nalla nanmai kidaikum pls brothers muslim enru parkathu samayam parkathu mudinthalavu help pannuwom athudan panam kodukka mudiyathawarkal pls pray for him tks

    ReplyDelete
  2. Can you please note his phone no.

    ReplyDelete
  3. இன்ஸா அல்லாஹ் நாம் அனைவரும் சகோதரர் ரஹ்மதுல்லாஹ் விற்கு உதவி செய்வதுடன். அவருக்காக பிரார்த்தனையும் செய்வோம்.

    ReplyDelete

Powered by Blogger.