Header Ads



ளெத்த விகாரையில் ஒரு மாடு..!

(Rifan Hussain)

பண்சலையின் மாடு

அண்மையில் எமது பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம் காலத்தின் தேவை கருதி இங்கு எழுதப்படுகின்றது.

கடந்த சிங்கள தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் முஸ்லிம் சகோதரர்களினால் பௌத்த சகோதரனிடமிருந்து மாடொன்று கொள்வனவு செய்யப்பட்டது. இந்த ஆண் மாடு மிகவும் முரட்டுச் சுபாவம் கொண்டதாக இருந்ததானால் கட்டுப்படுத்துவது சிரமமாகவே காணப்பட்டது. ஒரு சில நாட்களில் திடீரென அது தனைனை விடுவித்துக் கொண்டு ஓடவே அதனை கொள்வனவு செய்தவரும் மற்றவர்களும் அதனை பிடிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இருப்பினும் அது கைகூடவில்லை. இறுதியாக அது பௌத்த மக்கள் வாழ்கின்ற பிரதேசமொன்றை சென்றடைந்தது. 

எனவே மீண்டும் அந்த மாட்டை பெற்றுக் கொள்வதற்காக அங்கிருக்கும் ஒரு பௌத்த சகோதரனிடம் ரூபா 7000 தருவதாக கூறி அதனை பிடித்துத் தருமாறு  அதன் தற்போதைய உரிமையாளர் கூறியுள்ளார். அதற்குள் இந்த விடயம் ஊரினுள் பரவவே உசாரடைந்த ஊர்மக்கள் அந்த ஆண் மாட்டை பிடித்து அங்குள்ள பன்சலையில் தலைமை மதகுருவிடம் ஒப்படைத்துள்ளனர். 

இரைச்சிக்காக பலியிடப்படவிருந்த ஒரு உயிரை காப்பாற்றிய மகிழ்ச்சியில் ஊரார் அதனை பார்க்க திரண்டு வந்தனர். வரும் போது அதற்கு உணவிற்காக புல்லுக் கட்டையும்; சுமந்து வருவதற்கு அவர்கள் தவறவில்லை. இந்த மாட்டை திருப்பிக் கொடுப்பதில்லை எனவும் பன்சலை மூலமாக யாராவது ஒருவரிடம் பராமரிக்க ஒப்படைப்பதாகவும் தீர்மாணிக்கப்பட்டது. அதே நேரம் அந்த மாட்டை பிடித்தவர்கள் தாங்கள் தான் அதனை பராமரிக்க வேண்டும் என்ற அவாவிலும் காணப்பட்டனர்.

இந்த நிலையில் அந்த மாட்டை விற்ற உரிமையாளரான பௌத்தர் விடயம் கேள்விப்பட்டு அங்கு வந்துள்ளார். அவர் தான் இந்தமாட்டை நன்கொடையாகவே கொடுத்ததாகவும் பன்சலையில் இருப்பதுதான் இம்மாட்டிற்கு மிகவும் பொறுத்தமானது எனவும் தன்னிடம் மேலும் பல மாடுகள் இருப்பதாகவும, தேவைப்படின் இன்னும் மாடுகளை தர முடியும் எனவும் கூறி நழுவிச் சென்றுள்ளார்.

நாட்கள் நகர்ந்தன. மாட்டை பொருத்தமான ஒருத்தரிடம் பராமரிக்க கொடுக்க வேண்டும். எனவே தலைமை மதகுருவிடமிருந்து ஊராரிற்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டது. இதனை பராமரிக்க பொருத்தமான ஒருவர் முன்வரும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. கூடவே நிபந்தனைகளும் வழங்கப்பட்டன. இந்த மாட்டை விற்க முடியாது. இறைச்சிக்காக அறுக்கவும் முடியாது.

பசுவாக இருந்திருந்தால் பாலாவது கரக்கலாம். இந்த ஆண் மாட்டிலிருந்து என்ன செய்ய முடியும்? இறைச்சிக்காக அறுக்கவும் முடியாது. விற்கவும் முடியாது. எந்த மடையன் தான் தனது வேலைகளை ஒரு புரம் வைத்து விட்டு அதனை எடுத்துச் சென்று இறுதி வரைக்கும் அதற்கு ஒவ்வொரு நாளும் புல்லை வெட்டி உண்ணக் கொடுத்;து பாராமரிக்க முன்வருவான்.

இப்போது மாட்டை பாரம் எடுக்க யாருமே முன்வரவில்லை. அன்று ஊரில் உள்ள அனைவரும் மாட்டை பார்க்க வரும்போது புல்லை கொண்டு வந்தார்கள். இப்போது புல்லைக் கொடுப்பதற்குக் கூட ஆளில்லை. மாட்டை பிடித்தவர்கள் பிடித்த கடமைக்காக ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து புல்லை வெட்டச் செல்கிறார்கள். ஆனால் அவர்களும் இம்மாட்டை பாரம் எடுக்க இப்போது தயாரில்லை. அன்று நான் நீ என மாட்டை பாரம் எடுக்க வந்தவர்கள் இன்று யாருமேயில்லை.

இலங்கையில் 2012 ஆண்டு மாத்திரம் 173,821 மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் சாராசரியாக 170,000 மாடுகள் அநுமதிப்பத்திரத்துடன் இறைச்சிக்காக அறுக்கப்படுகின்றன. (http://www.statistics.gov.lk/agriculture/Livestock/slaughterstatistcs.html)

இந்த ஒரு மாட்டின் நிலையே இப்படியென்றால் இலங்கையில் இறைச்சிக்காக மாடு அறுப்பது நிறுத்தப்பட்டால்...?


2 comments:

  1. பகுத்தறிவோ,புத்தக அறிவோ இந்த மாடுகளை அறுக்கவேண்டாமென சொல்லும் இரண்டு கால் மாடுகளிடம் இல்லை என்பதே உண்மை. பாடசாலை கல்வியில் மிக சாதாரண விஞ்சான பாடத்தில் சொல்லிக்கொடுப்பதுதான் உணவுச்சங்கிலி பாடம்.இந்த பாடத்தை இந்த இரண்டுகால் மாடுகள் கற்காமல் விட்டிருக்கனும்,அல்லது கற்றுக்கொடுத்தது விளங்காமல் விட்டிருக்கனும். உண்மையை அறிந்து இலங்கை கல்வி அமைச்சு மீண்டும் இந்த பாடத்தை நன்கு விளங்கும்படியாக அச்சிட்டு இந்த மாடுகளிடம்,மாடுகளின் சந்ததிகளிடம் கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  2. Dear Rifkan hussain ,You dint mention your hometown to conform how much this store is true.plz tell your hometown.

    ReplyDelete

Powered by Blogger.