''இலங்கை முஸ்லிம்கள் தமது வர்த்தக நிலையங்களை, காப்புறுதி செய்துகொள்ள வேண்டும்''
(இ. அம்மார்)
இன்று இலங்கை வாழ் முஸ்லிம் தம் சமூகத்திற்கு எதிராக முற்றுப் புள்ளியற்ற நிலையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை மிகவும் நிதானத்துடனும் பொறுமையுடனும் தாங்கி கொண்டிருக்கின்றனர். இந்த இக்கெட்டான சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் தங்களுடைய வர்த்தக நிலையங்களை காப்புறுதி செய்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளும்படி கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். ஏ ஹலீம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெஷன் பக், அளுத்கம, குருநாகலில் நடைபெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் மீது தாக்குதல் போன்ற பின்னணிகளைப் பார்க்கின்ற போது திட்டமிட்ட அடிப்படையில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. மானவல்லையில் ஹாட்வயார் எரிப்பு மின் கசிவின் மூலம் ஏற்பட்டதா அல்லது திட்டமிட்ட அடிப்படையில் அக்கடையில் பின்னால் உள்ள ஒரு இரும்புக் கதவையும் ஒரு பலகைக் கதவையும் இரும்புக் கம்பியால் உடைத்துக் கொண்டு உள்நுழைந்து தீ மூட்டப்பட்டதா என்ற சந்தேகங்கள் இருந்து கொண்டிருக்கின்றன.
இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் மிகப் பொறுமை காத்துக் கொண்டு இருக்கின்றனர். எனினும் இவ்வாறான கோடிக் கணக்கான இழப்புக்களை நஷ;டயீட்டின் மூலம் பெற்றுக் கொள்வதற்காக பாதுகாப்பு காப்புறுதிகளைச் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத் தேவை இருந்து கொண்டிருக்கிறது. இதில் இஸ்லாமிய சட்டவரம்புகளைப் பார்த்துக் கொண்டிருக்காமல் தங்களுடைய வர்த்தக நிலையங்களை காப்புறுதி செய்து கொள்ளுதல் மிக மிக அவசியமாகும்.
எனவே இந்த நாட்டில் முப்பது வருட கால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஐந்தாண்டு நிறைவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் மூவின மக்களிடையே பிளவை உண்டு பண்ணும் மேலும் ஒரு பயங்கரவாதம் சில தீய சக்திகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்டுவரும் சமூகத்தை பாதுகாக்க வேண்டி பாரிய கடப்பாடு இந்த ஆட்சியாளருக்கு உண்டு. எனவே இந்த பதற்றமான சூழலில் முஸ்லிம்கள் இறைவனிடம் கூடுதலாக பிரார்த்தனைகளில் ஈடுபடுவதுடன் தங்களுடைய வர்த்தக நிலையங்களை பாதுகாப்புக் கருதி காப்புறுதி செய்துகொள்ளுதல் வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் தெரிவித்தார்.

All the insurances offered by Conventional Insurance Companies are haram other than third party. Please go to Takaful Islamic Insurance companies, provided that they return back some of your premium in proportion to your respective shares of contributions for the period.
ReplyDeleteIs he Muslim? Look at his statement quoting "Don't look at Islamic Rules"....Jaffna Muslim Admin, Don't prioritize this type of anti islamic articles.
ReplyDeleteகருத்து - 1: "இதில் இஸ்லாமிய சட்டவரம்புகளை பார்த்துக்கொண்டிருக்காமல் தங்களுடைய வர்த்தக நிலையங்களை காப்புறுதி செய்துகொள்ளுதல் மிக மிக அவசியமாகும்"
ReplyDeleteகருத்து - 2: "எனவே பதற்றமான சூழலில் முஸ்லிம்கள் இறைவனிடம் கூடுதலாகப் பிரார்த்தனைகளில் ஈடுபடுவதுடன் தங்களுடைய வர்த்தக நிலையங்களை பாதுகாப்புக்கருதி காப்புறுதி செய்துகொள்ளுதல் வேண்டும்"
கருத்து 1 யும் 2 யும் ஒப்பிட்டால், நாங்கள் அல்லாஹ்வின் கட்டளை (இஸ்லாமிய சட்டவரம்புகளை) மீறுவோம். அல்லாஹ்விடம் துஆவும் செய்வோம். இதுவே இன்று பல முஸ்லிம்களின் நிலையாகிவிட்டது. இன்று முஸ்லிம்களின் வியாபாரத்தில் வட்டி என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. வட்டி எடுப்பது, கொடுப்பது, எழுதுவது, சாட்சிக்கு நிற்பது யாவும் பாவத்தில் சமம். இது அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் தொடுப்பதற்கு சமம். மேலும் வட்டி எவ்வளவு கேவலமாது என்றால் தனது தாயை திருமணம் செய்வதை விடவும் கேவலமான பாவம். ஆனால் இன்று இதை முஸ்லிம் சமூகம் சர்வ சாதாரணமாக செய்துகொண்டு அல்லாஹ்விடம் வெற்றியை எதிர்பார்க்கிறோம். அல்லாஹ் கொடையாளி கொடுத்துக்கொண்டே இருப்பான் ஆனால் ஒரு தருணத்தில் பிடிப்பான். ஆகவே அல்லாஹ்வை பயந்து எமது வியாபாரத்தை தூயமையாக்குவோம். சகாத் மற்றும் சதகாக்களை உரிய முறையில் கொடுப்போம். என்னதான் சோதனை வந்தாலும் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம். அதன் சட்டதிட்டங்களுக்குள் நின்று தீர்வை தேடுவோம். வெற்றி வழங்குவதும் தோல்வி வழங்குவதும் அவனே. பிறக்கும்போது வெறும் கையுடனே பிறந்தோம். இறந்த பின்பும் வெறும் கையுடனே செல்வோம்.
So called Our Muslim Leaders should be educated with Islamic Knowledge.
ReplyDeleteIt is not their mistake, but of public's who cast vote to such illiterates ( I mean lake of Islamic knowledge) to be come so call leaders to sit on chair.
இஸ்லாமிய சட்ட வரம்பை மீறுமாறு சொல்லும் இந்த முட்டாள் நாளைய மண்ணறையில் என்ன பதில் சொல்லப்போகின்றார்? போலி முஸ்லிம்களும், நயவஞ்சகர்களும் எமது சமுதாயத்தில் இன்னும் இருக்கின்றனர். உலக வாழ்க்கையை அனுபவிப்பதற்காக அல்லாஹ்வின் சட்டத்தை உதறித் தள்ளச் சொல்ல எப்படித்தான் மனம் வருகிறதோ? உண்மையான விசுவாசிகள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து அல்லாஹ் அனுமதியளித்துள்ள விதத்தில் மாத்திரம் பாதுகாப்பு அரண்களை அமைத்துக் கொள்வர்.
ReplyDeleteநிச்சயமாக எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்தான்" என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, "நீங்கள் பயப்படாதீர்கள் கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்" (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.
ReplyDelete"நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள் மேலும் (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது - அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.
"மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவனிடமிருந்துள்ள விருந்தாகும்" (இது என்று கூறுவார்கள்).
இந்த பன்னாட ஹலீம் சொல்வது போல் அல்ல நம்ம இஸ்லாம்....