பொகோ ஹராம் ஆயுதக் குழுவுக்கு எதிராக ஆபிரிக்க தலைவர்கள் 'யுத்த பிரகடனம்''
நைஜPரியாவின் பொகோ ஹராம் இஸ்லாமிய ஆயுதக் குழுவுக்கு எதிராக யுத்த நடவடிக்கையை முன் னெடுக்க பிரான்ஸில் கூடிய ஆபி ரிக்க நாட்டு தலைவர்கள் இணங்கி யுள்ளனர்.
ஆயுதக் குழுவுக்கு எதிராக உளவு மற்றும்; கூட்டு நடவடிக்கையை முன் னெடுக்க பிராந்திய சக்திகள் இணங் கியதாக பிரான்ஸ் மாநாட்டை ஏற் பாடு செய்த அந்நாட்டு ஜனாதிபதி பாரன்கொயிஸ் ஹொலன்டே குறிப் பிட்டார்.
பொகோ ஹராம் ஆயுதக்குழு கடந்த மாதம் 223 பாடசாலை சிறுமிகளை கடத்திச் சென்றதே இந்த மாநாட்டை நடத்துவதற்கு முக் கிய காரணமாகும். எனினும் நைஜP ரியா மற்றும் கெமரூன் நாடுகளில் பொகோ ஹராம் மேலும் தாக்குதல் களை நடத்தியிருப்பதாக அங்கி ருந்து வரும் செய்திகள் குறிப்பிடு கின்றன. அண்மைய ஆண்டுகளில் பொகோ ஹராமின் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட் டுள்ளனர்.
இந்நிலையில் பாரிசில் நேற்றுமுன் தினம் நடந்த மாநாட்டில் நைஜPரிய ஜனாதிபதி குட்லக் nஜhனதன் மற்றும் பெனின், கெமரூன், நைகர், சாட் நாட்டு தலைவர்களை பிரான்ஸ் ஜனாதிபதி ஒன்றுசேர்த்தார்.
இந்த மாநாட்டில் "சர்வதேச மற்றும் பிராந்திய செயல் திட்டம்" ஒன்றுக்கு இணக்கம் காணப்பட்டதாக ஹொலன்டே குறிப்பிட்டார். இதில் "உளவு மற்றும் தகவல்களை பரி மாறிக்கொள்ளல், எல்லை கண்கா ணிப்பு மறறும் அபாயமான தருணத் தில் தலையிட தயாராக சாட் ஏரிப்பகுதியில் நிலையான இராணு வத்தை நிறுத்திவைத்தல் போன்ற கூட்டு நடவடிக்கை" முன்னெடுக்கப் படவுள்ளது என்றும் அவர் விபரித் தார்.
கெமரூன் ஜனாதிபதி போல் பியா குறிப்பிடும்போது, ~~பொகோ ஹரா முக்கு எதிராக யுத்த பிரகடனம் செய்யவே நாம் இங்கு வந்திருக் கிறோம்" என்றார். "இது முழுமை யான யுத்தமாக இருக்கும்" என்று சாட் ஜனாதிபதி இதிரிஸ் டெபி குறிப்பிட்டார்.
முன்னதாக மேற்கு மற்றும் ஆபிரிக்காவுக்கு பொகோ ஹராம் பாரிய அச்சுறுத்தலாக இருப்பதாக வும் இது வட ஆபிரிக்க அல் கொய்தா ஆயுதக் குழுவுடனும் ஏனைய தீவிரவாத குழுக்களுடனும்; தொடர்புபட்டிருப்பதாகவும் ஹொலன்டே குறிப்பிட்டார்.
பொகோ ஹராம் ஆயுதக் குழு நைஜPரியாவில்; மட்டுமன்றி அயல் நாடுகளான நைகர், கெமரூன் மற் றும் சாட்டிலும் தனது தாக்குதல்க ளையும் நடத்துகின்றமை குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் நைஜPரியாவின் வட கிழக்கு எல்லைக்கு அருகிலுள்ள கெமரூன் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் சீன பொறியியல் நிறுவனம் ஒன்றின் மீது பொகோ ஹராம் ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒரு கெமரூன் இராணுவ வீரர் கொல்லப் பட்டிருப்பதோடு 10 சீன நாட்டவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
ஒருசில மணி நேரங்களுக்குள் நைஜPரியாவின் கிரமம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட பிறிதொரு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டோரில் சிறுவர்களும், பெண்களும் அடங்குவதாக பாதிக்கப் பட்ட குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
பாரிசில் நடந்த மாநாட்டில் பிரிட் டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளும் பங்கேற்றி ருந்தனர். பொகோ ஹராமின் ஒருசில முகாம்கள் எல்லைப் பகுதியில் இருக்கும் மன்டாரா மலைத் தொட ரில் அமைந்துள்ளது.
நைஜPரியாவின் போர்னோ மாநிலத் தில் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி கிறிஸ்தவர், முஸ்லிம்கள் என பாட சாலை சிறுமிகளை பொகோ ஹராம் கடத்திச் சென்றது. கடத்தப்பட்ட சிறுமிகளின் நகரத்திற்கு ஜனாதிபதி nஜhனதன் கடந்த வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொள்ள திட்டமிட் டிருந்தபோதும் பாதுகாப்பு காரணங் களால் அந்த பயணம் இரத்துச் செய்யப்பட்டது.
கடத்தப்பட்ட 100க்கும் அதிகமான பெண்களை காண்பிக்கும் வீடி யோவை பொகோ ஹராம் ஒரு வாரத்திற்கு முன்னர் வெளியிட்டது இந்த சிறுமிகளுக்காக தமது போராளிகளை விடுவிக்க நைஜPரிய அரசுக்கு அந்த வீடியோவில் நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி nஜhனதன் மறுப்பு தெரிவித்திருந்தார்.

Post a Comment