தனித்து போட்டியிட ஆசைப்படும் ரணில் விக்கிரமசிங்க
எதிர்வரும் பொது மற்றும் ஜனாதிபதி தேர்தல்களின் போது, ஐக்கிய தேசிய கட்சியிலே, போட்டியிடவுள்ளதாக எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம் பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், பொது மற்றும் ஜனாதிபதி தேர்தல்களின் போது. யானை சின்னத்தின் கீழ போட்டியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தேசிய தேர்தல்களை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வ தகவல்ளை வெளியிடவில்லை.
இதன்காரணமாக, அது தொடர்பில் எந்தவிதமான தீர்மானங்களையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
.jpg)
Post a Comment