தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் சிங்கத்திற்கு தடுப்பூசி ஏற்றியமை குறித்து விசாரணை
தெஹிவளை மிருகக்காட்சி சாலையிலுள்ள நோய்வாய்ப்பட்ட சிங்கமொன்றுக்குப் பதிலாக வேறு சிங்கமொன்றுக்கு நோய்த்தடுப்பூசி ஏற்றிய சம்பவம் தொடர்பில் தாவரவியல் பூங்கா பொதுப் பொழுதுபோக்கு அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சுமார் 20 வயதைத்தாண்டிய சிங்கமொன்றுக்கு தடுப்பூசி ஏற்ற வேண்டிய நிலையில் அதே கூண்டிலிருந்த மற்றொரு சிங்கத்திற்கு மிருக வைத்தியர்கள் தடுப்பூசி ஏற்றியுள்ளதாக அமைச்சின் செயலாளர் விலிகமகே தெரிவித்தார்.
இந்த சம்பவத்தினால் மிருக வைத்தியர்களுக்கும் ஊழியர்களுக்கு மிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றநிலை உருவாகியுள்ளது. அதன் பின்னர் நோய்வாய்ப்பட்டிருந்த சிங்கத்திற்கு தடுப்பூசி ஏற்ற மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை இடம்பெறுவதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். கடந்த வாரம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
.jpg)
Post a Comment