ஓன்றரை வயது குழந்தையின் சிறு நீரக சத்திர சிகிச்சைக்கு உதவுங்கள்..!
தம்புள்ளை கலேவல பிரதேசத்தில் இலக்கம். 87,23 கடுவளந்த வீதியில் வசிக்கும் வாகன சாரதி எம்.எம்.முபாறக் வயது 39 எம்.எப்.எப்.றிஸானா ஆகியோரின் புதல்வன் முஹம்மது சாகீர் ஒன்றரை வயது குழந்தை சிறு நீர் குழாயில் ஏற்பட்டுள்ள நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இக்குழந்தைக்கு சிறுநீர் சத்திர சிகிச்சை செய்வதற்கு 7 இலட்சம் தேவைப்படுவதாக இவரை பரிசோதித்த வைத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.
இப்பெரிய தொகையை இவர்களது குடும்பத்தால் திரட்ட முடியாத காரணத்தால் இக் குழந்தையின் சத்திர சிகிச்சைக்காக பணம் படைத்த தனவந்தர்கள்,சமூக சேவை நிறுவனங்கள்,சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் பண உதவி வழங்குமாறு அக்குழந்தையின் தாய், தந்தையர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.
இக்குழந்தையின் சத்திர சிகிச்சைக்காக தற்போது குழந்தையின் தாய், தந்தையர்களிடம் 3 இலட்சம் ரூபாய் உள்ளதாகவும் மேலும் 4 இலட்சம் ரூபாய் தேவைபடுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இக்குழந்தையின் சிறு நீர் சத்திர சிகிச்சை உதவ விரும்புவோர்
M.F. FATHIMA RIZANA
A/C : 8090022917 - COMMERCIAL BANK,
GALEWELA BRANCH
என்ற கணக்கு இலக்கத்திற்கு வைப்பிலிமாறும், அது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0773860024 என்ற தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளுமாறும் குழந்தையின் தந்தை முபாறக் வேண்டிக் கொள்கின்றார்.



Post a Comment