Header Ads



அரசாங்கத்தோடு முஸ்லிம் காங்கிரஸ் சேராமலேயே இருந்திருக்கலாம் - ஹக்கீம்


இன்றுள்ள நிலைமையை பார்க்கும்போது அரசாங்கத்தோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சேராமலேயே இருந்திருக்கலாமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

காத்தான்குடியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களை ஞாயிற்றுக்கிழமை (18) சந்தித்துக்  கலந்துரையாடினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணையவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டது. கட்சி பாதுகாக்கப்பட வேண்டுமாகவிருந்தால், அரசாங்கத்துடன் இணையவேண்டிய சூழ்நிலை காணப்பட்டது.

அரசாங்கத்துடன் இணைவதுதான் பொருத்தமென கட்சியின் பெரும்பாலானவர்களின் கருத்தும் அப்போது இருந்தது. கட்சி அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதில் பெரிய உடன்பாடு எதுவும் இருக்கவில்லை. கட்சியில் எஞ்சியுள்ளவர்களையும் காப்பாற்றவேண்டிய சூழ்நிலையிருந்தது.  அரசாங்கத்துடன் இணைந்து மூன்றரை வருடங்களாகின்றன. ஆனால், இன்றுள்ள நிலைமைகளை பார்க்கின்றபோது அரசாங்கத்தோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சேராமலேயே இருந்திருக்கலாமென்று எண்ணத்தோன்றுகின்றது.

கட்சி குறித்த கவலை அனைவருக்கும் இருக்கின்றது. விமர்சனங்களுக்கு கட்சியின் தலைமை முகம் கொடுக்க வேண்டியுமுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெறும் உணர்வு ரீதியாக அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுத்து விட முடியாது. 

இதய பூர்வமாக கட்சி ஆதரவாளர்களை அழைத்து கலந்துரையாடல்களை நடத்த வேண்டியுள்ளது. ஆதரவாளர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெறவேண்டியுள்ளது. கட்சியின் அமைப்பு வேலைகளையும் பலப்படுத்த வேண்டியுள்ளது. 

அடுத்த வருடம்  தேசிய மட்டத்தில் தேர்தலொன்று நடைபெறக்கூடிய சூழ்நிலையுள்ளது.  அது ஜனாதிபதித் தேர்தலாகவோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலாகவோ இருக்கலாம். இன்றுவரை ஜனாதிபதித் தேர்தலொன்றுக்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவே கூறப்படுகின்றது. எனினும், இனிவரும் மாற்றங்களைப் பொறுத்து முடிவுகள் மாறக்கூடிய நிலையுமுள்ளது.

ஊவா மாகாணத்தில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் அனைவரும் ஒன்றுபட்டு நின்றால் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஊவா மாகாணசபைத் தேர்தலில் அனைவரும் ஒன்றுபட வேண்டியுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை கலைக்கப்பட்டு ஒரு வருடமாகின்றது. இதற்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்த வேண்டும். இம்மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு அமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர் ஆகியோர் உள்ளனர். அவர்களின் ஆலோசனைகளுடன் கட்சியை  பலப்படுத்த வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத்தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பான எந்தத் தீர்மானம் எடுப்பதாக இருந்தாலும், அவற்றை கல்குடாத்தொகுதியிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் ஆலோசனையுடனேயே எடுக்கப்படும' என்றார். 

tm 

6 comments:

  1. தேர்தல் அறிவிக்கப்பட்டாலே இவருடைய நடிப்பு ஆரம்பம் ஆகிடும். அரசாங்கத்தில் இணைந்தது கட்சியை காப்பாற்றுவதற்கா இல்லை பதவியை பெறுவதற்க்கா? ஏமாறுபவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

    ReplyDelete
  2. YOU BECAME WOMEN.WOMEN ONLY WILL WORRY
    AFTER THE DID.

    ReplyDelete
  3. இப்போது மட்டும் என்ன.....?? நீங்கள் சாதித்தது ஒன்றுமில்லை... இனியும் உங்களால் இப்படி வீர வசனம் மட்டும் தான் பேச முடியும். 'கசினோ' வுக்கு ரிசாத் மற்றும் நீங்கள் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தீர்கள். அஸ்வர்-பௌசி காதர் போன்றோர் உள்ளே இருந்துகொண்டு 'தைரியமாக' ஆதரவு கொடுத்தார்கள். இதுதான் எமது தலைவர்களின் இன்றைய நிலை.

    எமது கலீபா மஹிந்த அவர்களும் 'தாராளமாக வெளியேறலாம்' என்றும் சொன்னது உங்களுக்கு என்னவோ மறந்திருக்கும். முடிந்தால் மக்களுக்கு நல்லது செய்ய முற்படுங்கள். சுயநலத்துக்காகவும் சுகபோகத்துக்காகவும் சொந்த இனத்தை பழிகொடுத்தால் வரலாறு பாடம் படிப்பிக்க ஒன்றும் தயங்காது.

    நீதியமைச்சராக இருக்கும் உங்களுக்கே தெரியும் 'எனக்கு எந்தவித அதிகாரமுமில்லை' என்று...!! இனி உங்களின் மேடைப்பேச்சுக்கள் அத்தனையும் குப்பைக்குத்தான் உதவும்.

    ReplyDelete
  4. thalaiwa naaga irikiriom ugaludan payapadadeerhal. allah nammodu irikiran

    ReplyDelete
  5. To: Rauf Hakeem!!! You have been doing deceptive politics over a decade, that witnessing the current situation SL Muslims are facing today. It is time for you to pack and get loss without further bullying Muslims.

    Oh Muslim! wake up against this tyrant who did non for our people but a famous lip service provider, time to time by various tunes.

    ReplyDelete
  6. அத அப்பவே யோசித்திருக்கவேண்டும், என்ன செய்வது, சில விடயங்களை அனுபவித்துத்தான் பார்க்கவேண்டியுள்ளது. அதேவேளை அரசாங்கத்தில் இவ்வளவு முஸ்லிம்கள் இருந்தும், முஸ்லிம்களுக்கு இக்கதி என்றால் விலகினால் எப்படி இருக்கும்? சேராதிருந்தால் என்ன நடந்திருக்கும்? என்று யோசிக்கத்தோணலாம், அவைகளை விட இன்றைய கால கட்டத்திற்கு முஸ்லிம்களுக்கு பாதுகாப்பாக வாழக்கூடிய வழிகளை எப்படி அமைத்துக்கொடுக்கலாம் என்பதை சிந்திப்பதுவும் அதன் படி காய் நகர்தல்களை கொண்டுசெலவதுவுமே மிகச்சிறந்தது. அதற்கான சிறந்ததொரு தீர்வாக தற்போது கட்டவிழ்திடப்பட்டுள்ள கொடுமைகளுக்கு முஸ்லிம்களை ஆதரிக்கும் பெளத்த மக்களுடன் சேர்ந்து நியாத்திற்காக போராடவேண்டியதன் அவசியத்தை நம் தலைவர்கள் உணர்வார்களாயின் இப்பிரச்சினைகளுக்கு ஓரளவு தீர்வுகளைக்காணலாம்.

    ReplyDelete

Powered by Blogger.