கோமாளி அரசியல்வாதிகள் பற்றி மக்கள் அறிந்துவைத்துள்ளார்கள் - கயந்த கருணாதிலக்க
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்ந்த பங்காளி கட்சிகள் சில அரசாங்கத்திற்கு எதிராக தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி தமது கருத்தை முன்வைத்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க, அரசாங்கத்தின் தாளத்திற்கும், வசன அமைப்புகளுக்கும் ஏற்ப நாடகம் நடிக்கும் கோமாளி அரசியல்வாதிகள் பற்றி மக்கள் அறிந்துவைத்துள்ளார்கள் என்று குறிப்பிட்டார்.
அதேபோன்று உண்மையான கொள்கைகளுடன் செயற்படும் அரசியல் தரப்பினர் யார் என்பது குறித்து நாட்டு மக்கள் தெரிந்து செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் சலுகைகளை முழுமையான அனுபவித்துக்கொண்டு இவ்வாறு கோமாளியாக நகைச்சுவை நாடகங்களை அரங்கேற்றும் அமைச்சர்களை பொதுமக்கள் அனுமதிக்க மாட்டார்.
உண்மையாகவே இவ்வாறான குற்றச்சாட்டுகளை அரசாங்கத்தை மீது முன்வைக்கும் அரசியல்வாதிகளாக இருப்பார்களாயின் அரச பங்காளி என்ற நிலையில் இருந்து விலக வேண்டும் எனவும், கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டார்.
.jpg)
Post a Comment