Header Ads



பௌத்த துறவிகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்வது, பௌத்த தர்மத்துக்கு பிரச்சினையை உண்டுபண்ணும்

பௌத்த துறவிகளை போன்று காவியுடை அணிந்த பலர் நிதி சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக இலங்கையின் பிரதமர் டி எம் ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
இதில் பிச்சையெடுப்போரும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய பிரதமர், இது தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.  அவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் பௌத்த தர்மத்தையும் பௌத்த துறவிகளையும் பாதுகாக்க வேண்டியுள்ளது.

அதேநேரம் நாட்டில் பௌத்த துறவிகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதும் பௌத்த தர்மத்துக்கு பிரச்சினையை உண்டுபண்ணும் என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.