Header Ads



மதப் பயங்கரவாத நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது - மாதுலுவே சோபித தேரர்

ஜனாதிபதி தேர்தலி;ல் பங்கேற்கும் உத்தேசங்கள் எதுவும் கிடையாது என கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் பீடாதிபதி மாதுலுவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சகல மத மக்களிடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே தமது நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மதப் பயங்கரவாத நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் பேச்சுவார்த்தைகளில் பங்களிப்பு வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய முறைமைகளில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.