Header Ads



முஸ்லிம்களை ஆத்திரமடையச் செய்ய போலிப் பிரச்சாரங்கள் முன்னெடுப்பு - புலனாய்வு பிரிவு

நாட்டில் மத முரண்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கில் சூழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பல்வேறு மத அமைப்புக்கள் தொடர்பில் பிழையான கருத்துக்களை பிரச்சாரம் செய்து அதன் மூலம் முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கப்படுகின்றது.

இந்த சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுப்போரை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

சூழ்ச்சித் திட்டங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

மத முரண்பாடுகளை ஏற்படுத்தும் நபர்கள் குறித்து விரிவான விசாரணை நடாத்துமாறு பாதுகாப்பு அமைச்சு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

நேற்று மடு தேவாயலத்தை ஒரு தரப்பினர் சுற்றி வளைக்க உள்ளதாக போலிப் பிரச்சாரம் செய்யப்பட்டதாகவும், அவ்வாறான சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேபோன்று முஸ்லிம் மக்களை ஆத்திரமடையச் செய்யும் வகையில் சில தரப்பினர் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறு போலிப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் தொடர்பில் தகவல்களை திரட்ட மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மத முரண்பாடுகள் தொடர்பில் விசாரணை நடாத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட புதிய பொலிஸ் பிரிவிற்கு, இந்த தகவல்களை வழங்க பாதுகாப்ப அமைச்சு தீர்மானித்துள்ளது.

3 comments:

  1. dont make drama.muslims are not fool.govt doing all this rusty works.

    ReplyDelete
  2. NO WORRY.. கலீபா ராஜபக்ச பார்த்துக்கொல்வார்...!!!!!!!!!

    ReplyDelete
  3. Yaar yaarku enna viruthu kodukka vendrum endru theriyamal khalifa viruthai petra khalifawin aduththa kattamae ithu.

    ReplyDelete

Powered by Blogger.