கல்முனை மக்களை வலுவூட்டும் நடமாடும் சேவை
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அறிவுறுத்தளுக்கினங்க கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்களை வலுவூட்டும் நடமாடும் சேவை 03-04-2014 மருதமுனை மக்கள் மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாககலந்துகொண்டார். இங்குபொது மக்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன்.நடமாடும் சேவையில் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கானஉடனடிதீர்வுகளும் வழங்கப்பட்டன.


Post a Comment