Header Ads



ஆசிரியர் ஆலேசகர்களின் கடமை வரையறுக்கப்பட வேண்டும்

(ஊர்க் குருவி)

கிழக்கு மாகாணத்தில் உள்ள வலயக்கல்வி அலுவலகங்களில் இணைக்கப்பட்டுள்ள 'ஆசிரிய ஆலேசகர்களின் பணிவரையறுக்கப்பட வேண்டும்.இவர்கள் பாடசாலைக்குத் தரிசனம் செய்து என்ன? செய்கின்றனர்.எவ்வளவு நேரத்தை அங்கு செலவு செய்கின்றனர்.மாதிரி வகுப்புக்கள் எவற்றையாவது நடாத்துகின்றனரா? பண்பாக பாடசாலை சமூகத்தினருடன் நடந்து கொள்கின்றனரா? என்பதெல்லாம் கேள்விக்குறியாக உள்ளன.வரவுச்சான்றிதழில் மட்டும் குறிப்பாக உள்ளனர்.

ஆசிரியர் ஆலோசகர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்ட போது நல்ல தேர்ச்சிகளை பெற்ற உயர் கல்வித் தரங்கனை கொண்ட பல ஆசிரியர்கள் விண்ணப்பிக்காமல் ஒதுங்கி விட்டனர்.இது சிலருக்கு நல்ல சந்தர்ப்பமாக மாறிவிட்டது.ஆசிரியராக கடமை புரிந்த போது எவ்விதப்பாடக் குறிப்பும் வாழ்வில் எழுதி இருக்காத சிலரும் ஆசிரிய ஆலேசகராக உள்ளனர். இவர்கள ஆசியரியர்களிடம் பாடக்குறிப்பை கோரும் போது ஆசிரியர்கள் ஏளனமாக அவர்களை நோக்குகின்றனர்.விராலில்லாத குளத்தில் வற்றுக்குரட்டை அதிகாரி என்பது தான் ஞாபகம் வருகின்றது. 

ஆசிரியர்களை தரக்குறைவாக விமர்சிப்பதும் ,எப்போதும் குறைகாண்பதும் ஆரோக்கியமானதல்ல. இவ்விடயம் ஆசிரியர் சங்கத்தின் கவனத்திற்குச் சென்றால் நிலைமை என்னவாகும். ஒரு ஆசிரிய ஆலோசகர் பாடசாலைக்குச் சென்று அதிபரின் அனுமதி பெற்றே பின்பே வகுப்பறைக்குச் செல்ல வேண்டும்.இதை மீறிச் சென்ற ஒரு ஆசிரிய ஆலோசகரை பாடசாலை அதிபர் ஒருவர் வெளியேற்றிய சம்பவமும் ஒரு பிரபல்ய பாடசாலையில் நடைபெற்றுள்ளது.

பாடசாலையில் இருக்கும் சம்பவத்திரட்டுப் புத்தகத்தில் குறிப்பு ஏதும் எழுதும் அதிகாரமும் இவர்கட்கு இல்லை. ஆகவே, ஆசிரிய ஆலோசகர்களின் கடமை என்ன , என்ன என்பது வரையறுக்கப்பட்டு அவர்களுக்கு உரிய வழிகாட்டல் ஆலேசனைகளை வலயக்கல்விப் பணிப்பாளர்கள்; வழங்க வேண்டும்.தொடர்ந்து ஆசிரியர்களை அவமானப்படுத்தும் செயற்பாடுகள் தொடருமானால் இவ்விடயம் கல்வி அமைச்சர் கவனத்திற்கும்,ஆசிரியர் சங்கங்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும் என சில பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

1 comment:

  1. தரம் கெட்ட அரசியலின் பின்விளைவுகளும் இதற்கு காரணம்.அரசியலின் செல்வாக்கில் தரமற்றவர்கள் அதிபர்களாகுவதும்,ஆசிரிய ஆலோசகர்களாக மாறுவதும்,இன்னும் என்னென்ன சாத்தியங்களோ அனைத்தையும் அரசியலினூடாக சாதிக்கப்பார்க்கின்றனர்.நான் சொல்லுவதை யாரும் மருக்க முடியாது,உங்கள் பிரதேசத்திலும் இப்படியான் கேவலமான வாழ்க்கையில் இருக்கின்றனர். உரோசம் கெட்டவர்கள்,நாளை ஆறடி குழியில் தனியாகத்தான் வெறும் கையோடுதான் இருக்கப்போகின்றான்,அதனை நினைத்தால் எவ்வாசையும் எவனுக்கும் வராது.

    ReplyDelete

Powered by Blogger.