Header Ads



கிராம சேவகர்களினதும், அவர்களது காரியாலய நடவடிக்கைகளும் பொதுமக்களுடன் சிநேகபூர்வமாக அமைவதை உறுதிப்படுத்த கோரிக்கை

(எம்.எம்.ஏ.ஸமட்)

கிராம சேவகர்களினதும் அவர்களது காரியாலய நடவடிக்கைகளும் ; பொதுமக்களுடன் சிநேகபூர்வமாக அமைவதை உறுதிப்படுத்துமாறு பொதுமக்கள் பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் தெரிவிப்பதாவது, சில கிராம சேவகர்களினாலும் அவர்களினது காரியாலயங்களினாலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் திருப்திகரமற்றதாக அமையவில்லை. 

ஒரு சில கிராம சேவர்களுக்கு காரியாலயங்கள் உள்ள போதிலும் பல கிராம சேவகர்கள் காரியாலயங்களின்றி தங்களது வீடுகளை காரியாலயங்களாகச் செயற்படுத்தி வருகின்றனர்.

அத்துடன,; கிராம சேவகர்களை எந்த நேரத்தில் பொது மக்கள் சந்திக்காலம் என்ற ஒழுங்கும், ; நேர காலமும் பல கிராம சேவகர் காரியாலங்களில் காட்சிப்படுத்தப்படுவதில்லை.

இதன்காரணமாக சேவையைப் பெறுவதற்காக கிராம சேவகர்களைச் சந்திக்கச் செல்லும் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கின்றனர். 

சான்றிதழ் ஒன்றைப் பெறுவதற்காக பொதுமக்கள் ஒரு சில கிராம சேவகர்;களை நாள்கணக்கில் தேடி அலைய வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அவர்கள்; விசனம் தெரிவிக்கின்றனர்.

அதுமாத்திரமின்றி, ஒரு சில கிராம சேவகர்கள் சிநேகபூர்வமாக மக்களுடன் செயற்படுவதில்லை எனத்; குறிப்பிடும் பொதுமக்கள் இவற்றைக் கருத்திற்கொண்டு கிராம சேவர்;களுக்கும் மக்களுக்குமிடையிலான நடவடிக்கைகள் சிநேகபூர்வமாக இடம்பெறுதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட பொறிமுறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும்  கிராம சேவர்;களினது சேவைளும் கிராம சேவகர் காரியாலயச் செயற்பாடுகளின் அடைவுகள் குறித்தும் உறுதிப்படுத்துவதற்கான மதிப்பிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம்  கோரிக்கை  முன் வைப்பதாக பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, சகல பிரதேச செயலகங்களையும் தரப்படுத்தும் நடவடிக்கையினை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

இதன்நிமித்தம், நாட்டிலுள்ள 331 பிரதேச செயலகங்களையும் தரம் ஏ.பி.சி.டி என வகைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பிரதேச செயலகங்களை வகைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்திற்கேற்ப பொது மக்களுக்கும் செயலகங்களுக்குமிடையிலான நடவடிக்கைகள் சிநேகபூர்வமானதாக அமைய பெறுவதுடன், சிறந்த அடைவுகளைக் கொடுக்கக் கூடியதாக அமைவது தொடர்பாக அறிவூட்டும் நடவடிக்கைகள்  அமைச்சின் விஷேட மதிப்பீட்டுக்குழுக்களினால் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக  அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.

இது தொடர்பான சில ஆய்வுகள் மிகவும் உறுதியாகவும் சகல மதிப்பீட்டு முறைகளினூடாகவும் மேற்கொள்ளப்பட்டு வகைப்படுத்தல் நடவடிக்கையானது சிறந்த மொறிமுறையினூடக அமுல்படுத்தப்படவுள்ளன.
இத்திட்டம் தொடர்பாக அறிவூட்டும் நடவடிக்கைகள் தற்போது புத்தளம் மற்றும் குருநகால் மாவட்ட பிரதேச செயலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பி;டத்தக்கது


2 comments:

  1. உண்மைதான். அவங்க மக்களுக்காக இல்லை. அவங்களுக்காகத்தான் மக்கள் என்ன நிலையில்தான் இருக்கின்றார்கள். இதற்கொரு சரியான தீர்வு கிடைக்கவேண்டும். கிடைக்கும். மக்களும் உரியவர்களை நாடவேண்டும்.

    ReplyDelete
  2. நான் திரும்பவும் சொல்லுகின்றேன்,இலங்கையில் இலஞ்சம் கொடுத்து தொழில் எடுக்கும் சகல தொழிலாளர்களும் இப்படித்தான்,அதிலும் கிராம சேவர்கள் பலர்,அரசின் கோட்டா முறையில் பணம் பெற்று கொடுக்கப்படும் தொழில்களிலேயே வாழ்ந்து வருகிறார்கள், முறையற்ற நியமணங்கள் எங்குவெல்லாம் இருக்கிறதோ,அங்கெல்லாம் நிச்சயம் அதிகூடிய பிரச்சினைகளும் இருக்கும்.

    இலஞ்சம் கொடுத்து தொழிலுக்கு வந்த கிராம உத்தியோகத்தர்கள்,மக்களிடமும் அதே இலஞ்சத்தை எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக கரையோ மாவட்டங்களில் நடந்த அன்ணர்த்தங்ககளுக்கான வெளினாட்டு கொடுப்பணவுகளில் எம் கிராம உத்தியோகத்தர்கள் ரொம்பவே விளையாடிவிட்டார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.