மண்முனை பாலத்தினால் மக்களுக்கு அதிக பயன்
(யு.எல்.எம். றியாஸ்)
மட்டக்களப்பு எழுவான் கரையையும் படுவான் கரையையும் இணைக்கும் மண்முனை பாலத்தை கடந்த (19.04.2014) அன்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அவர்களினால் கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டத்தை தொடர்ந்து இப்பிரதேச மக்களின் நீண்டகால கனவு நனவாகியுள்ளதுடன் அதன் நன்மையையும் இப்பகுதி மக்கள் அனுபவிக்கத்தொடன்கியுள்ளனர்.
பாலம் திறந்து வைக்கப்பட்ட நாளிலிருந்து இப்பிரதேசத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகைதருவதை காணக்கூடியதாக உள்ளது .அத்துடன் பாலத்தை
சுற்றியுள்ள பிரதேசங்களிலுள்ள ரம்யமான சூழலையும் மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
தற்போது சுற்றுலா தளமாக பன்முனை பாலத்தை அண்டிய பிரதேசம் காட்சியளிக்கிறது. தமிழ்,முஸ்லிம் மக்கள் பெருமளவில் இப் பிரதேசத்தில் சங்கமித்துள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.





Post a Comment